விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 16, 2012
நாண் லியான் பூங்கா ஹொங்கொங்கில் மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும். இந்தப் பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நாண் லியான் பூங்காவின் உள்ளே கட்டப்பட்டுள்ள டாங் அரசவம்சக் கட்டட வடிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படம்: அருண் |