விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 19, 2010
கிறித்துமசு அல்லது நத்தார் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்புவிழா கொண்டாட்டங்களில் ஆலய வழிபாடு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துவ களிப்பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். படத்தில் மடோன்னாவும் குழந்தையும் (1459), பிலிப்போ லிப்பி என்ற இத்தாலிய ஓவியர் வரைந்தது. |