விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 23, 2012
மீட்பரான கிறித்து பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக இது கருதப்படுகின்றது. இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. |