விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 9, 2012
பச்சைக் குக்குறுவான் என்பது ஒரு ஆசிய குக்குறுவான் பறவை. குக்குறுவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை. தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. படம்: அன்ரன் |