விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 27, 2015

மயில் இந்தியாவின் தேசியப் பறவை. ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. அவற்றின் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும் ஆண்மயில் ஒன்றை படத்தில் காணலாம்.

படம்: கேப்ரியல் கசுட்டால்டீனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்