விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 3, 2014
பெசிமர் செயல்முறை என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலையில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும். இதில் பெசிமர் மாற்றி எனும் உலை பயன்படுத்தப்படுகிறது. இவ்வுலையினுள் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து எஃகு உருவாக்கப்படுகிறது. படத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெசிமர் மாற்றி காட்டப்பட்டுள்ளது. |