விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 13, 2006
கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும் அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அட்லாண்டிக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாராக் கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணை]]யூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது. கருங்கடல் 422,000 கிமீ2 பரப்பளவும், 2210 மீட்டர் ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக்கடலில் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் ஆறு ஆகும். |