விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 14, 2010
அல் அக்சா பள்ளிவாசல் யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். முசுலிம்களின் மரபுப்படி முகமது நபி மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. கிபி 710 இல் மரத்தாலான முதலாவது அல் அக்சா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 இல் நடைபெற்றது. இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெருசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது. |