விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 15, 2014
சூரியகாந்தி (Helianthus annuus ) அமெரிக்க நாடுகளில் தோன்றிய பூக்கும் தாவரம். மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டு திருப்பகுணம் கொண்டுள்ளன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் கழியும் போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்கு திசைக்குத் திரும்புகின்றன. படம்: Fir0002 |