விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 21, 2010
சிறிய நீர்க்காகம் கரண்டம், அர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது; தெற்கு பாகித்தானில் தொடங்கி இந்தியா, இலங்கை வழியே கிழக்கு இந்தோனேசியா வரை இதன் இனப்பெருக்க வாழ்விடங்கள் அமைந்துள்ளன. செவ்வக வடிவத்தலை, பழுப்பு நிற சிறிய அலகு கொண்ட இவை ஏறக்குறைய 53 செ.மீ நீளமுடையது. உடல் முழுவதும் கருப்பாக, ஒருவித பச்சை நிற மினுமினுப்புடன் காணப்படும். தொண்டைப்பை பகுதியைச் சுற்றி வெண்ணிறத் திட்டு இருக்கும். இனப்பெருக்க காலத்தில் இவ்வெண்ணிறத் திட்டு மறைந்து விடும். கருவிழித்திரை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். அலகின் கீழே தொண்டைப் பை இருக்கும். |