விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 22, 2015
குருடர் தடவிய யானை நீதிக்கதை பலவகைப்பட்ட உண்மைகளையும், பொய்மைகளையும் கேட்போருக்கு உணர்த்த பயன்படுகிறது. சில குருடர்கள் (அல்லது இருட்டில் சில மனிதர்கள்) ஒரு யானையைத் தடவிப் பார்க்கிறார்கள். தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்று உணர முயலுகிறார்கள். யானையைப் பற்றிய கருத்து வேறுபாடு முற்றி அவர்களிடையே சண்டை மூளுகிறது. படத்தில் சப்பானிய ஓவியர் அனபூசா இட்ச்சோ வரைந்த ”யானையைத் தடவும் குருட்டுத் துறவிகள்” என்ற மர அச்சு ஓவியத்தைக் காணலாம் படம்:அனபூசா இட்ச்சோ |