விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 15, 2012
ஆஃப்னியம் - சாம்பல் நிறம் கொண்ட தனிமமமான இது கோப்பன்ஹேகனில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. நியூட்ரான்களை அதிகமாக உட்கவரும் பண்பைப் பெற்றிருப்பதால் அணு உலைகளில் கட்டுப்படுத்தும் கழிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையில் தனியாகக் கிடைக்காமல் சிர்க்கோனியத்துடன் சேர்ந்தே கிடைக்கிறது. உலகில் மலாவி, பிரேசில், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அதிகமாக இது கிடைக்கிறது. மக்கள்தொகை கூடக்கூட இதன் தேவை பெருகினால் இன்னும் 10 ஆண்டுகள் வரை மட்டுமே இது கிடைக்கும் என்று கணித்துள்ளனர். படத்தில் ஆஃப்னியம் துண்டுகள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. |