விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 5, 2012
இருகண் நோக்கி என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ளவை மிக அருகில் இருப்பது போல இருக்கும். படத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இரு கண்ணோக்கி ஒன்று காட்டப்பட்டுள்ளது. |