விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 21, 2012
பாலஸ்தீனாவில் வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இதை இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன. இயேசு உயிர்த்தெழும் காட்சியைச் சித்தரிக்கும் ஒரு சுவரோவியம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. |