விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 1, 2011
ஓஊ (ʻōʻū) என்பது ஹவாய் தீவுகளிலுள்ள தனிச் சிறப்பான மிக அருகிவிட்ட ஒரு பறவையினம் ஆகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம். ஹவாய்த் தீவுகளின் ஆறு பெருந்தீவுகளில் முன்னர் பரவி வாழ்ந்த இப்பறவையினம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே எண்ணிக்கையில் குறைவடையத் தொடங்கியது. இப்பறவை 1989ஆம் ஆண்டு கடைசியாக கௌவாய் பகுதியில் காணப்பட்டது பதியப்பட்டுள்ளது. படத்தில் கீழிருப்பது ஆண் பறவை, மேலே இருப்பது பெண் பறவையாகும். |