விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-05082017

திகதி/நேரம்/இடம்

தொகு
  • ஆகத்து 5, 2017 - சனிக்கிழமை
  • இலங்கை/இந்திய நேரம்: பிப: 5:30 - 7:00
  • ஸ்கைப்: https://join.skype.com/BxrWCOHgEheZ

நிகழ்ச்சி நிரல்

தொகு
  • தமிழினியினிடம் பின்னூட்டம் பெறல்,
  • சில முன்னோடிக் களப் பணிகளைத் திட்டமிடல்,
  • கிழக்குப் பட்டற்றைத் திட்டமிடல் ஆகியன முதன்மை Agenda Items ஆகும்.
  • தொழிற்கலைகள் பட்டியல் முதல் வரைவு
  • Template உருவாக்கம்

Action Items

தொகு
  • பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பு - பலர்
  • மலையகப் பங்களிப்பாளர்களை google group இல் சேர்த்தல்
  • மின்னஞ்சல் தொடர்புகளை ஏற்படுத்தல்

பங்களிப்பாளர்கள்

தொகு
  • இந்திரச்செல்வன் - Indraselvan

வேலு இந்திரச்செல்வன் அவர்கள் கோனபிட்டிய தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணி புரிகிறார். மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவையின் செலாளராகவும், மலையக சமூக ஆய்வு மையத்தில் ஓர் உறுப்பினராகவும் செயற்பட்டு வருபவர். அரசியல், கலைத்துறைகளில் ஆர்வம் உள்ளவர். ஆவணப்படுத்தலில் தன்னால் முடிந்த முயற்சிகளில் சேர்ந்து பங்களிக்க முடியும் என்று கூறினார்.

  • ஜெயபிரசாத் - Jeyaprasath

ஜெயபிரசாத் அவர்கள் நோர்வூட்டை சொந்த ஊராகக் கொண்டவர். வணிகத்தில் ஈடுபாடுள்ளார். மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவையில் மற்றும் மலையக சமூக ஆய்வு மையத்தில் செயற்பட்டு வருபவர். ஆவணப்படுத்தலுக்கு பூரண ஒத்துளைப்பு தர முடியும்.

  • ராஜசேகரன் - Rajasegaran

சுப்பையா ராஜசேகரன் அவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வட்டகொடையில் வசிக்கிறார். 55 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியராக ஒரு பாடசாலையை நடத்தி வந்தவர். அண்மையில் ஓய்வுபெற்றுள்ளார். மலையகம் தொடர்பான அரசியல், வாழ்வியல், நாட்டுப்புறவியல் உட்பட்ட பல துறைத் தகவல்களை தேடி ஆவணப்படுத்தி வருகிறார். 4500 நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்தி உள்ளார். ஆவணப்படுத்தலில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.

  • புஸ்பராஜ் - Pushparajh

சிவலிங்கம் புஸ்பராஜ் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள முக்கார் ஊரை சொந்த ஊராகக் கொண்டவர். தற்போது நோர்வூட்டில் வசிக்கிறார். எட்டு ஆண்டுகளாக பிரதேச செயலகத்தில் கடைமையாற்றி, அண்மையில் ஆசிரியப் பணியில் இணைந்துள்ளார். மலையக கிராமிய வழிபாட்டு முறையை ஆய்ந்து வருகிறார். இதுவரைக்கும் 140 வரையான தெய்வங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். இத் தெய்வங்கள் பற்றிய பல்லூடகப் பதிவுகளை இவர் உருவாக்கி உள்ளார்

  • தனபாலசிங்கம் - Thanabalasingam

கந்தையா தனபாலசிங்கம் அவர்கள் லிந்துலவை சொந்த இடமாகக் கொண்டவர். பதினொரு ஆண்டுகளாக கொழும்பில் வசிக்கிறார். சிறிதுகாலம் ஆசிரியரகாப் பணி புரிந்த பின்பு தற்போது நீரழிவுநோய் நடுவம் ஒன்றில் பணி புரிகிறார். மேலும் இவர் ஒரு ஊடகவியலாளர். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணி புரிந்துள்ளார். இணையத்தள ஊடகங்களில் பணி புரிந்துள்ளார். தமிழ் மலர் வானொலியில் பணி புரிந்து வருகிறார். மலையக தமிழீழ ஊடகவியல் சங்கத்தின் செயலாளாராகவும் மலையகத் தமிழ் ஆய்வு மையத்தில் ஓர் உறுப்பினரகாவும் செயற்பட்டு வருகிறார். மலையகம்.காம் என்ற வலைத்தளத்தை உருவாக்கும் நோக்குடன் நிறைய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். youtube இல் மலையகத்துகான ஒரு channel உருவாக்கி அதில் குறும்/ஆவணப் படங்களை வெளியிட்டுள்ளார்.

  • விஜயகாந்தன் - Vijayakanthan

பழனியாண்டி வியஜகாந்தன் அவர்கள் மலையத்தில் உள்ள பொகவந்தலாவை என்ற ஊரை சொந்த இடமாகக் கொண்டவர். தமிழ் ஆசிரியராகப் பணி புரிகிறார். ஆவணப்படுத்தலில் ஆர்வம் உள்ளவர். தற்போது இணையத்தில் மலையகம் தொடர்பான ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி வருகிறேன். 150 இணைப்புகளை இவ்வாறு அடையாளம் கண்டு உள்ளேன். நமதுமலையகம் ஆசிரியர் குழுவில் உள்ளார். மலையக கூத்து வடிவங்கள், அவற்றின் வரலாறுகள், சமூக பண்பாட்டு பின்புலங்கள் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்.

கீழ் கண்டபவர்கள் பற்றிய விபரங்களை இங்கேயும்: https://meta.wikimedia.org/wiki/Grants:Project/Tamil_Wikimedia-Noolaham_Foundation/Multimedia_Documentation_of_Traditional_Trades_and_Crafts_of_Eastern,_Northern_and_Up-Country_Sri_Lanka, https://ta.wikipedia.org/s/5x7y ஆகிய இடங்களில் பார்க்கலாம்:

  • சிவகுமார்
  • பிரசாந்
  • ரமணேஸ்
  • மயூரநாதன்
  • தமிழினி
  • கோபி
  • நற்கீரன்

இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமால் ஆனால் மலையக ஆவணப்படுத்தலில் பின்வருவோரும் ஆர்வமாக உள்ளனர்: ஜெயகுமார், ஜோதிலிங்கம், விஜயகுமார், பிரியா.

சந்திப்புக் குறிப்புகள்

தொகு

இணைய இணைப்பு, கணினி வசதி

தொகு
  • விஜகாந்தன் - ஒப்பீட்டளவில் இணைய வசதி குறைவுதான். எல்லோரிடமும் போஸ்புக் இருக்கு, டுவிட்டர் இருக்கு ஆனால் சமூகம் சார்ந்து இணையத்தைப் பயன்படுத்துவது குறைவு. எல்லாம் தொடக்க நிலையில் இருக்கின்றது. தனிநபர்களை அடையாளப்படுத்தும் இணையத்தளங்கள் அதிகம் இருக்கின்றன. சமூக அசைவியக்கத்துக்கு உதவும் இணையத்தளங்கள் குறைவு, அவற்றை மக்கள் அறிந்திருப்பது குறைவாக இருக்கின்றது. எ.கா விக்கிப்பீடியாவில் பங்களிக்க முடியும் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலான பாடசாலைகளில் கணினி வசதி இருந்தாலும், சரியான வழிகாட்டல் இல்லை. பரவலாகக் கொண்டு செல்ல இன்னும் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. நமது மலையகம் போன்று தொடர்ந்து இற்றைப்படுத்தும் தளங்கள் அரிது. பலர் இலவசமாகக் கிடைக்கும் blogspot மற்றும் wordpress தளங்களையே பயன்படுத்துகிறார்கள். உள்ளீடுகள் விரிவாக அமையவில்லை. 10 - 15% சமூகம் சார்ந்து இயங்குகின்றன.
  • நற்கீரன் - இந்தச் செயற்திட்டம் ஊடாக பயிற்சிகளை வழங்குவது ஒரு முக்கிய கூறாக உள்ளது. தமிழ்க் கணிமை அறிமுகம், விக்கிப்பீடியா அறிமுகம், பல்லூடக ஆவணப்படுத்தல், கள ஆவணப்படுத்தலில் போன்ற களங்களில் பயிற்சிகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
  • விஜயகாந்தன் - இப்படியான ஒரு பயிற்சி அல்லது கலந்துரையாடல் முன்னர் ஒருமுறை நடந்தது, அதனை நூலக நிறுவம் நடத்தியது. மல்லிகைப்பூ திலகர் ஆகியோர் நடத்தினர். நமது மலையகம், நூலகம் ஆகியவை இத் துறைசார்ந்து இயங்கி வந்துள்ளன.
  • ஜெயபிரசாத் - விஜகாந்தன் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நான் கூட விக்கிப்பீடியாவில் பங்களிக்க முடியும் என்று தமிழினி கூறியபின்பே அறிந்து கொண்டேன். நூலகம் நடத்திய நிகழ்வுக்கு நானும் சென்று இருந்தேன். அங்கே மலையக நூல்கள் கொண்ட ஒரு DVD வெளியிடப்பட்டது, அது என்னிடம் உண்டு. ஆவணகம் பற்றியும் அண்மையில்தான் அறிந்து கொண்டேன். இணையப் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. மூலதானப் பிரச்சினையாக இருக்கலாம். Coverage இம் சிக்கலான உள்ளது. பயிற்சிகளும் இல்லை. பாடசாலைகளில் இவை பற்றி படிப்பப்பது மிகவும் குறைவு.
  • இந்திரச்செல்வன் - எங்களுடைய மக்களுடைய வரலாறுகளை ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமான தேவை ஆகும். வேகமாக எமது மக்களின் தடையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். தொழில்நுட்பப் பயிற்சிகளை ஆர்வம் உள்ளவர்களுக்கு வழங்கி, இதயச் சுத்தியோடு நாம் பங்களித்து செயற்படுவோமாய் இருந்தால் இதை மேலே கொண்டுபோக ஒரு வாய்ப்பாக இருக்கும்.
  • புஸ்பராஜ் - இணையப் பாவனை என்று சொல்லும் போது மலையகத்தில் 60% மேலாக பயன்பாடு உள்ளது. வயத ரீதியாக, படித்தவர்கள் மத்தியில் எல்லா மட்டத்திலும் உள்ளது. சாதரமானவர்கள் மத்தியில் இளையவர்களிடம் (<30) இணையப் பாவனை உண்டு. எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதே கேள்வி. ஆர்வம் உள்ளவர்களை நாம் கண்டுபிடித்தாலே ஆவணப்படுத்தலில் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.
  • நற்கீரன் - நூலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஊடாக கணினி வசதி உண்டா?
  • பாடசாலைகளில் கணினி வசதி இருந்தாலும், இணைய வசதி இருக்காமல் இருக்கலாம். அப்படி இருந்தாலும் பெரும்பாலும் மாணவர்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆசிரியர்கள் அல்லது அதிபர்களே (அதிபதிகள்) அவற்றைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.
  • தொழில்நுட்பம் ஒரு பிரச்சினையாக உள்ளது. எ.கா ஒருவருக்கு சேகரிக்க ஆர்வம் இருக்கும். ஆனால் அவருக்கு video செய்யத் தெரியாது. சிலர் பதிவுச் செய்து வைத்துள்ளார்கள், ஆனால் அவர்களுக்கு இணையத்தில் பகிரத் தெரியாமல் உள்ளார்கள்.
  • நற்கீரன் - இணையச் சேவைகளை எப்படி அமைகின்றன?
  • விஜகாந்தன் - உள்ளூர் lines ஊடகா இணையத்தை அணுகலாம். டொங்கல் அடித்து connect செய்யலாம். 4G வரைக்கும் wireless சேவைகளு உண்டு. இப்ப ஓரளவு இணையத்தை எடுக்கும் வாய்ப்பு உண்டு.
  • நற்கீரன் - கணினி/இணைய வசதி, பயிற்சிகள், உபகரணங்கள் ஆவணப்படுத்தலுக்குத் தேவையாக உள்ளது. இணைய அணுக்கம், கணினி போன்ற shared infrastructure விக்கிப்பீடியா செயற்திட்டங்கள் பங்களிப்புச் சார்ந்து வழங்கப்படுகிறது.
  • ராஜசேகரன் - என்ற வயதில் விக்கிப்பீடியாவை பயன்படுத்துவது குறைவு. பேஸ்புக்கை நான் பயன்படுத்துகிறேன். எனது பிள்ளைகள் அதனை எனக்குப் பழக்கித் தந்தார்கள். சில தகவல்களை அங்கே பகிர கிடைத்த வரவேற்பு என்னை மேலும் பல தகவல்களை பேஸ்புக்கில் பகிர ஊக்கப்படுத்தியது. போஸ்புக்கில் பல தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை கட்சி சார்ந்து அல்லது சமயம் சார்ந்து இயங்குகின்றன. நான் பொதுவாக மக்கள் சேவை சார்ந்தே இயங்க விரும்புகிறேன்.

பயிற்சிகள்

தொகு
  • நற்கீரன் - பயிற்சிகள் முக்கியம் என்று பலரும் கருத்துரைத்து உள்ளார்கள். அந்த வகையில் பயிற்சிகளை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம், எங்கே செய்யலாம், யார் ஒருங்கிணைக்க உதவுவார் என்று பார்க்கலாம். தமிழ்க் கணிமை, விக்கிப்பீடியா, பல்லூடக ஆவணப்படுத்தல் போன்ற விடயங்கள் குறுத்தி பயிற்சிகள் வழங்கலாம்.
  • விஜகாந்தன் - யாருக்கு இந்தப் பயிற்சி பொருத்தமானது என்று நாம் தீர்மானிக்க வேண்டும். ஆக்களை நாம் தெரிவுசெய்ய வேண்டும். நான் இருக்கும் இடத்தில் நான் ஒருங்கிணைக்க முடியும்.
  • ஜெயபிரசாந் - அதே போன்று நோவுட்ல் நான் ஒருங்கிணைக்க உதவ முடியும். ஆக்களையும் திரட்ட உதவலாம்.
  • எதாவது ஒரு இடத்தில் பயிற்சிகள் செய்ய முயற்சி செய்கிறோமா? முழு நாட் பயிற்சியா?
  • நற்கீரன் - பயிற்சிகளுக்கான வடிவம் நாம் இணைந்து தீர்மானிக்க வேண்டியது. சிறிய சிறிய பயிற்சிகளாக அல்லது முழுநாட் பயிற்சியாக அமையலாம்.
  • ஈடுபாடு உள்ளவர்களை invite செய்து ஒரு பயிற்சி வழங்குவது கூடிய effective ஆக இருக்கும். இந்தக் குழுவில் உள்ளவர்கள் இதனை ஒருங்கிணைக்க முடியும்.
  • மயூரநாதன் - சிறிய குழுவிற்கு intensive ஆக பயிற்சிகளை வழங்கி, அவர்களை பிறருக்கு பயிற்சிகளை வழங்கவுமாறு செய்து பார்க்கலாம்.
  • கற்றன் ஒரு மையப்புள்ளியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  • ராஜசேகரன் - கற்றன் நல்ல தெரிவு என்று நானும் கருதுகிறேன்.
  • ரமணேஸ் - இந்தச் செயற்திட்டதின் அடைவுகளை முன்னிறுத்திச் செயற்படுதல் அவசியம் ஆகும். results oriented ஆக நாம் செயற்பட வேண்டி உள்ளது. கற்றன் பயிற்சிப் பட்டறையின் ஊடாக நாம் பெறக்கூடிய அடைவுகளை முன்வைத்து செயற்பட வேண்டும். இல்லாவிடின் நாம் results பெறுவது சிரமாமகலாம்.
  • சிவகுமார் - கற்றன் பொருத்தமான இடம். 20 - 25 நபர்கள் நல்ல அளவாக இருக்கும். வெவ்வேறு வயதினரைக் கொண்டவர்களுக்கு பயற்சிகளை வழங்குவது பயன்மிக்கதாக இருக்கும். செயலமர்வாக செய்தலாலே பயன்மிக்கது. 10 வரையான கணினி வசதி இருந்தாலே சிறப்பாக இருக்கும்.
  • நற்கீரன் - இந்தச் செயற்திட்டம் ஒரு தூண்டுகோலாக அமைந்தாலும், விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் நீண்ட கால இலக்குகளை முன்வைத்து இயங்குபவை. முதலாவது பட்டறைக்கு கற்றன் பலருக்கும் பொருத்தமான இடமாகத் தெரிகிறது. கணினி மற்றும் இணைய வசதி பட்டறைக்கு அவசியம் ஆகும்.
  • கணினிக்கு ஏற்பாடு செய்யலாம். 4G Router பெற்றுக் கொண்டால் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
  • நற்கீரன் - 4G Router போன்ற பகிர்ந்து கொள்ளக் கூடியவற்றை நாம் பெற்றுக் கூடிய வழிமுறைகளைப் பாக்கலாம்.
  • தொண்டமான் பயிற்சி நிலையத்தில் கணினி வசதிகள் சில இடங்களில் உண்டு. பிராஜசக்தி நிலையங்களில் உண்டு. சில பாடசாலிகளில் உண்டு.
  • விஜகாந்தன் - இடத்தை தங்கி இருப்பதைப் பார்க்க, நாம் கணினி, 4G Router போன்றவற்றை நாம் கொண்டு போகலாம்.
  • நற்கீரன் - எந்த நிலையில் பயிற்சிகளை target பண்ணலாம்?
  • தனபாலசிங்கம் - பல நிலைகளில் உள்ளவர்கள் இருப்பார்கள். தமிழ்க் கணிமை அறிமுகமு. தேவையாக இருக்கும்.
  • சிவகுமார் - ஆர்வம் இப்போது இருக்கும் போது நாம் வேகமாக பயிற்சியை ஒருங்கிணைப்பது நன்று என்று கருதுகிறேன்.
  • மயூரநாதன் சிவகுமார் ஆகியோர் பயிற்சி வழங்கக் கூடியதாக இருக்கும்.
  • மயூரநாதன் - நாம் இந்தச் செயற்திட்டத்தையும் ஒரு முக்கிய கூறாக பயிற்சியில் இடம்பெறச் செய்தல் வேண்டும். தெளிவான விளக்கம் கொடுத்தல் வேண்டும். ஏற்கனவே prepare செய்து கொள்ள வேண்டும்.
  • நற்கீரன் - Logistics workout செய்ய வேண்டும். மின்னஞ்சல்கள் ஊடாகவும், வரும் சந்திப்புக்கள் ஊடாகவும் செய்யலாம்.
  • பலர் ஆர்வமாக உள்ளார்கள். ஒரு நல்ல output ஐ பார்க்கலாம்.
  • இந்தச் சந்திப்பை ஒருங்கிணைக்க உதவிய தமிழினிக்கு நன்றிகள். பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளுதலும் பயன்மிக்கதாக அமையும். குறிப்பாக ஊடகவியல் துறை மாணவர்களை.