விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 31, 2012
- பாறைக் குவிமாடம் (படம்) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயத்தினர் முக்கியமாகக் கருதுகின்ற தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும்.
- கடம்பர் பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர்.
- சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள 164.8 கி.மீ (102.4 மைல்) நீளமுடைய இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் உலகிலுள்ள நீண்ட பாலம் ஆகும்.
- 323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.
- பச்சோந்தி கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லது.