விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 21, 2013
- ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள சார் மணி உலகின் மிகப் பெரிய மணி (படம்) ஆகும்.
- சீனாவிலுள்ள சிடு தொங்கு பாலம் உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.
- உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் 165 மீட்டர் (541 அடி) உயரமுடைய சிங்கப்பூர் பிளையர் என்பதாகும்.
- சர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர் முத்து குமாரசுவாமி ஆவார்.
- சூரிய மையக் கொள்கையை முதலில் வெளியிட்டவர் சமொசின் அரிஸ்டாகஸ் ஆவார்.