விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 24, 2016
- மாந்தர்கள் சிலருக்கு உள்ளத்திலே தாங்கள் கண்ட காட்சியைப் படமாகக் காண முடியாமல் இருக்கும் ஒருவகை நரம்பியல் குறைபாடு உளப்படம் அமையாக் குறைபாடு எனப்படுகிறது.
- இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கனிஸ்தான் அமைச்சரவை சல்மா அணை என்ற பெயரை மாற்றி "இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு" அணை எனப் பெயரிட்டது.
- ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய அந்தமானியப் பழங்குடிகள் (படம்) தென்கிழக்காசியாவின் நெகிரிட்டோ இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.