விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 29, 2012
- செங்காந்தள் மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.
- புனித பேதுரு பேராலயம் உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.
- கடல் வாழினங்களான சாக்குக்கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு.
- மது கோடா உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.
- இரணிய நாடகம் நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.