விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 20, 2012
- இரும விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.
- வாழை இலையில் உண்ணும் போது அந்த உணவின் சுவை அதிகமாகத் தெரிவதற்கு காரணம் இலையிலுள்ள மாப்பொருட்கள் ஆகும்.
- நக்கிள்ஸ் மலைத்தொடர் இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.
- சஙீரான் தொல்லியல் களத்தில் கண்டறியப்பட்ட 18 லட்சம் ஆண்டுகள் பழமையான சாவக மனிதன் எச்சமே உலகில் பழமையான மனித எச்சம்.
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது உலகில் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக சில நாட்களை சர்வதேச நாட்களாக அறிவித்துள்ளது.