விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 4, 2012
- இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான டெமாஃ பெரிய பள்ளிவாசல் (படம்) இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.
- 1931ஆம் ஆண்டு வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.
- சந்திரசேகர் வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.
- தமிழக மூவேந்தர்களால் வெளியிடப்பட்ட முத்திரைக் காசுகள் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
- ஒரு ராட்சத எரிமலையின் வெடிப்பு குறைந்தது 1000 கன கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும்.