விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 14, 2010
- ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில் கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கொனார்க் சூரியன் கோயில் (படம்) சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டது.இக்கோயிலைக் கட்டப் பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டது.
- நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் வெந்நீரூற்றுகள் உலகில் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் எனும் இடத்தில் இருக்கின்றன.
- சீனாவின் பீக்கிங் நகரருகில் 1929 இல் 2,50,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த முழுவளர்ச்சியடையாத மனிதக் குரங்கு மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பீக்கிங் மனிதன் என்றழைக்கின்றனர்.
- கம்போடியா மக்கள் பொரித்த சிலந்திகளை உணவாக உட்கொள்கின்றனர்.
- பரிவு மசக்கை என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.
- கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி அணை ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.
- பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் தாலவிலாசம். சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.