விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 3, 2014
- பலாங்கொடை மனிதன் எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.
- உலகின் முதன் முதலில் இருக்கை பட்டை (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.
- 1954 இல் வெளிவந்த அந்த நாள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.
- மோகிசம் அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.
- கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.