விக்கிப்பீடியா:காணாமல் போன விக்கிபீடியர்கள்

மிக அருமையாய் தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரையாக்கப் பங்களிப்புகள் செய்து, ஒரு தகவலும் சொல்லாமல் நீண்ட நாட்களாகக் காணாமல் போன விக்கிபீடியர்கள் பட்டியலைக் கீழே காணலாம். அவர்கள் விரைவில் விக்கிபீடியாவுக்குத் திரும்பி இப்பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற நன்னோக்கிலும் அவர்கள் நலம் அறியும் பொருட்டும் உருவாக்கப்பட்டதே இப்பட்டியல் :)

பப்படுதொகு

பல்வேறு உணவுப்பொருட்கள், கனிகள் குறித்த முழுமையான, அருமையான கட்டுரைப் பங்களிப்புகளைத் தந்திருந்தார்.

காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 05:38, 11 ஜனவரி 2006

சந்தோஷ் குருதொகு

பல இலக்கியவாதிகளை பற்றிய தரமான அறிமுகக் கட்டுரைகளை எழுதி உள்ளார். தொடக்க காலத்தில், பல தளங்களிலும் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்திய கொள்கை பரப்புச்செயலாளர் :).

காணாமல் போன நாள் மற்றும் நேரம்: 06:31, 7 பெப்ரவரி 2006