விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/இந்தியா

மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கிறேன்--ரவி (பேச்சு) 16:17, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

வழிமொழிகிறேன். -- Sundar \பேச்சு 04:30, 20 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]


நானும் வழிமொழிகிறேன் என்றாலும், இக்கட்டுரையில் எழுத்து, வசன, நடை வழுக்கள் உள்ளன. அவற்றை அகற்றிய பின்னரே இதனை சிறப்பு கட்டுரையாக ஆக்குதல் சிறந்தது. இல்லாவிடில் தமிழ் விக்கிபிடியாவின் தரம் குன்றிவிடும் - சுரேன்
சுரேன், பலரும் சேர்ந்து ஒரு கட்டுரையை எழுதும்போது கட்டுரையின் தொனி வேறுபடுவது எதிர்பார்க்கக்கூடியது தான். இயன்ற அளவு நீங்கள் கூறியுள்ள முரண்பாடுகளை களைவோம். நீங்களும் உதவலாம். நன்றி--ரவி (பேச்சு) 09:55, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

பெரிய சிக்கல்கள் எதுவுமில்லையெனில் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாமா? ஏனெனில், அவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில விக்கியில் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பிற்கருகில் ஒரு நட்சத்திரக்குறி இருக்கும். இதன் மூலம் கூடுதல் கவன ஈர்ப்பு கிடைக்க வழி ஏற்படும். -- Sundar \பேச்சு 08:31, 27 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சுரேனின் ஆலோசனையை கொஞ்சமாவது முயன்று பார்த்துவிட்டு பிறகு அறிவிக்கலாம் என்பது என் எண்ணம்--ரவி (பேச்சு) 09:40, 27 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
சுரேன், நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தந்தால் சீர்செய்ய வசதியாக இருக்கும். -- Sundar \பேச்சு 09:52, 27 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]