விக்கிப்பீடியா:தமிழ்நாடு அரசு நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், ஊர்கள் தொடர்பான கட்டுரைகள்/ஒழுங்கமைத்தல்

தமிழ்நாடு அரசின் நிர்வாகம், இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊர்கள், நகரங்கள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை ஒழுங்கமைப்பதற்கான திட்டப் பக்கம்.

நோக்கம்

தொகு
  1. கட்டுரை வடிவமைப்புகளில் தற்போது இருக்கும் தவறுகளைத் திருத்துதல்.
  2. எதிர்காலத்தில், அமைப்புகளில் மாற்றங்கள் நிகழும்போது - அவற்றைச் சிறந்த முறையில் சரியாக இற்றை செய்வதற்கான உதவிக் குறிப்புகளை உருவாக்குதல்.

திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள்

தொகு
  1. கட்டுரைகளில் உரிய பகுப்புகளைச் சேர்த்தல்.
  2. தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்குதல்.
  3. வார்ப்புருகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்தல்.
  4. உதவி:தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள் எனும் பக்கத்தை மேம்படுத்துதல்.

உதவிக் குறிப்புகள்

தொகு

ஊர் குறித்த கட்டுரையில் பகுப்புகள்

தொகு
  1. அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் அல்லது அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் பகுப்பு இடப்பட்டிருந்தால், அரியலூர் மாவட்டம் எனும் பகுப்பினை இடவேண்டியது இல்லை. (ஏனெனில் முதலிரண்டு பகுப்புகள் அரியலூர் மாவட்டத்தின் சேய்ப் பகுப்புகள். சேய்ப் பகுப்பினை இட்டுவிட்டால், தாய்ப் பகுப்பினை இடுதல் கூடாது).
  2. ஒரு ஊரானது சிற்றூராக (village) இருப்பின், அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பினை இடவேண்டும்.
  3. ஒரு ஊரானது சிற்றூராக இல்லாதபட்சத்தில் (town or city), அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் பகுப்பினை இட வேண்டும்.

செய்துள்ள பணிகள்

தொகு
  1. பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள் என்பது பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள் என நகர்த்தப்பட்டது.
  2. பகுப்பு:இரண்டாம் நிலை நகராட்சிகள் என்பது பகுப்பு:தமிழ்நாடு இரண்டாம் நிலை நகராட்சிகள் என நகர்த்தப்பட்டது.
  3. பகுப்பு:தமிழ்நாடு மூன்றாம் நிலை நகராட்சிகள் உருவாக்கப்பட்டது.
  4. பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டது.
  5. பகுப்பு:தமிழ்நாடு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டது.

புதிய கட்டுரைகளுக்கான வாய்ப்புகள்

தொகு
  1. ஊராட்சிகள் குறித்த கட்டுரைகள் இருப்பது போன்று, பேரூராட்சிகள் குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். காண்க: தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்