உதவி:தமிழ்நாடு அரசின் நிருவாகம் தொடர்பான கட்டுரைகளுக்கான வழிகாட்டல்கள்

தமிழ்நாட்டு அரசு நிருவாகம் தொடர்பான ஆயிரக்கணக்கான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. இக்கட்டுரைகளில் தொகுத்தல் பணிகளைச் செய்வதற்கு உதவும் வழிகாட்டல் பக்கம்.

நோக்கம்

தொகு
  1. தலைப்பிற்கு ஏற்ற வகையில் உள்ளடக்கங்களை சேர்த்தல்.
  2. தலைப்பிற்கு ஏற்ற வகையில் உள்ளடக்கங்கள் இல்லாது இருப்பின் அவற்றை துப்புரவு செய்து, செம்மைப்படுத்துதல்.
  3. எதிர்காலத்தில், அமைப்புகளில் மாற்றங்கள் நிகழும்போது, அவற்றைச் சிறந்த முறையில் சரியாக இற்றை செய்தல்.

கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகள்

தொகு
  1. திருநெல்வேலி மாநகராட்சி கட்டுரையில், மாநகராட்சி தொடர்பான தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
    //திருநெல்வேலி மாவட்டம்தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். பூலித்தேவன், காயிதே மில்லத் இஸ்மாயில், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெண்ணிக் காலாடி, வாஞ்சிநாதன் மற்றும் விடுதலைப் புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகும். டிவிஎஸ் குழுமம், சிம்சன், ஏசான், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி, 'அல்வா' தயாரிப்புக்குப் பிரசித்திப் பெற்ற இடமாகும். இதனால் இது, "அல்வா நகரம்" என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.// ஆகிய தகவல்களும் உள்ளன. மாவட்டம் குறித்த தகவல்களை திருநெல்வேலி மாவட்டம் எனும் கட்டுரையிலும், நகரம் குறித்த தகவல்களை திருநெல்வேலி எனும் கட்டுரையிலும் எழுத வேண்டும்.
  2. நாகர்கோவில் மாநகராட்சி கட்டுரையில் ஆன்மிகத் தலங்கள் எனும் துணைத் தலைப்பின் கீழ், 5 கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இக்கோயில்கள் நாகர்கோவில் மாவட்டத்தில் காணப்படும் கோயில்கள் ஆகும். இவை, கட்டுரைத் தலைப்பிற்கு பொருத்தமற்ற தகவல்கள் ஆகும்.

உள்ளடக்கத் தகவல்கள்

தொகு
  1. களக்காடு எனும் பெயரில் ஊர் குறித்த கட்டுரையும், களக்காடு நகராட்சி எனும் பெயரில் நகராட்சி குறித்த கட்டுரையும் உள்ளன. தகவல்களை இக்கட்டுரைகளுக்கு இடையே உரிய வகையில் இடவேண்டும்.

பகுப்புகள்

தொகு
  1. கூடுவாஞ்சேரி கட்டுரையில் பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் எனும் பகுப்பு இருக்க வேண்டும்.
  2. கூடுவாஞ்சேரி பேரூராட்சி கட்டுரையில் பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் எனும் பகுப்பு இருக்க வேண்டும்.

நிர்வாக அலகுகள்

தொகு
எண் நிர்வாக அலகு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் விளக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை
1 சிற்றூர் (கிராமம்) village - கணக்கெடுக்க வேண்டும்
2 ஊராட்சி Gram panchayat கடைசி நிர்வாக அலகு. ஊராட்சிக்குள் பல சிற்றூர்கள் அடங்கும். 500இற்கு அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்கள் ஊராட்சிகள் ஆகும். 11,153 கட்டுரைகள்
3 ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து ஒன்றியம்) Panchayat Union or Block Development Office ஊராட்சி ஒன்றியத்திற்குள் பல ஊராட்சிகள் அடங்கும். 373 கட்டுரைகள்
4 பேரூராட்சி Town Panchayat தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில், அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாய் உடைய ஊர் பேரூராட்சி ஆகும். 488 கட்டுரைகள்
5 நகராட்சி Municipality சிற்றூரும் இல்லாத, பெருநகராகவும் இல்லாத ஊர் நகராட்சி ஆகும்.
*ஆண்டு வருமானம் உரூபாய் 10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சிகள்
*உரூபாய் 6 கோடி முதல் 10 கோடி வரை வருமானம் பெறுபவை தேர்வு நிலை நகராட்சி
*உரூபாய் 4 கோடி முதல் 6 கோடி வரை பெறுபவை முதல் நிலை நகராட்சிகள்
*உரூபாய் 4 கோடி வரை வருமானம் பெறுபவை இரண்டாம் நிலை நகராட்சிகள்
*அதற்குக் கீழ் வருமானம் பெறுபவை மூன்றாம் நிலை நகராட்சிகள்
கணக்கெடுக்க வேண்டும்

வருவாய் துறை (Revenue Department)

தொகு
  1. வருவாய் வட்டம் (Taluk) என்பது மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி அமைக்கப்படும் அமைப்பு வருவாய் வட்டம் எனப்படுகிறது. இந்த அமைப்பின்கீழ் உள்வட்டங்களும், வருவாய்க் கிராமங்களும் வரும்.
  2. சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் (Revenue Division) அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன.

காண்க

தொகு