விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவோர்
தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு
தொகுபுதிய தலைமுறை வார இதழ் (அக்டோபர் 1, 2009) பக்கம் 11,12: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளி. "தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் டேட்டா கார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிப்பீடியா. பாடம் சம்பந்தமான சந்தேகங்களை இதைப் பார்த்தும் தீர்த்துக் கொள்கிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது... "--ரவி 20:34, 28 செப்டெம்பர் 2009 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. மகிழ்வும் தெம்பும் ஊட்டும் செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.--சிவக்குமார் \பேச்சு 19:29, 1 அக்டோபர் 2009 (UTC)
- ஆம். இது போன்ற நிகழ்வுகள் தாம் நமது தளத்தின் நோக்கத்தை நிறைவு செய்வதாக உள்ளன. நன்றி, இரவி. -- சுந்தர் \பேச்சு 04:20, 2 அக்டோபர் 2009 (UTC)
ஆமாம், சுந்தர், சிவா. தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலம் முதல் இந்தச் செய்தியைக் கண்டு தான் மிகவும் மகிழ்ந்தேன். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காவது பயன்படும் வகையில் அவர்கள் பாடம் தொடர்பான எளிய அறிமுக கட்டுரைகளை உருவாக்குவதை ஒரு முக்கிய செயல் திட்டமாக உருவாக்க வேண்டும். அடுத்த ஆண்டின் தமிழ் விக்கி செயல் திட்டத்தில் இதற்கு முன்னுரிமை தரலாம். முதற்பக்கத்தில் "மாணவர் பக்கம்" என்ற தலைப்பில் இத்தகைய கட்டுரைகளைக் காட்சிப்படுத்தலாம்--ரவி 09:13, 2 அக்டோபர் 2009 (UTC)
இந்தப் பள்ளி பற்றி அச்சிடப்பட்ட கட்டுரையின் திருத்தப்படாத இணையப் பதிப்பு--ரவி 13:07, 5 அக்டோபர் 2009 (UTC)
- இச்செய்திகளைக் கேட்டு மிக மகிழ்ந்தேன். நமக்குண்டான பொறுப்பும் இதனால் நன்குணரலாம். இப்படி அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை எல்லா நிலைகளுக்கும் பயன்படுமாறு விக்கித்திட்டங்களையும் அதன் உறவுத்திட்டங்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். தலைசிறந்த நல்லாக்கப் பணிகளுள் விக்கிப்பணிகள் ஒன்று என்பதை நினைவில் கொள்வோம். --செல்வா 13:28, 5 அக்டோபர் 2009 (UTC)
இப்பள்ளியின் தலைமையாசிரியரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அறிந்து கொண்டவை:
- தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் வழிய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- ஒரு நாளைக்கு ஒரு பாட வேளை நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. வீட்டுப் பாடம், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற தேவைகள் இருந்தால் பகல் உணவு வேளை, மாலை பள்ளி விட்ட பிறகும் கூடுதல் நேரம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.
- கட்டுரைகள் 99% வீதம் புரிந்து கொள்ளத்தக்கதாகவே உள்ளன.
- மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பயன்படுத்திப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது.
- புதுக்கோட்டை மாவட்டம் (அதாவது உள்ளூர் தகவல்கள்), தமிழ்நாடு, இந்தியா குறித்த செய்திகள் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
- எடுத்துக்காட்டுப் பயன்பாடுகள்: "நாட்டுக்குழைத்த தலைவர்கள்" என்று போட்டி வைத்தால் மாணவர்களே காமராசர், நேரு என்று தேடி அக்கட்டுரைகளை அச்சிட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். "காவிரி தன் வரலாறு கூறுதல்" என்று தலைப்பு வைத்தால் காவிரி ஆற்றுக் கட்டுரைக்குள் புகுந்து குடகு, பூம்புகார் என்று ஒன்றுக்குள் ஒன்றாக தொடர் கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விக்கி வரவுக்கு முன் பாடநூல் அல்லது நூலக நூலில் உள்ள ஒரே மாதிரியான கட்டுரைகளையே எல்லாரும் படித்ததாகவும் தற்போது பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் படித்துப் படைப்பூக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இது வரை 20 வரிகள் எழுதிக் கொண்டிருந்தவர்கள் 60 வரிகள் உள்ள அளவுக்கு தகவல் சேர்த்து எழுதுகிறார்கள் (இது விரிவான கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையை உணர்த்துகிறது)
- தமிழ் விக்சனரியையும் பயன்படுத்துகிறார்கள்.
ஆக மொத்தம் விக்கி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இன்னும் மென்மேலும் விக்கியை வளர்த்து எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை ஊருக்குச் செல்கையில் பள்ளிக்கு நேரடியாகவே சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாட எண்ணி இருக்கிறேன். --ரவி 12:05, 8 அக்டோபர் 2009 (UTC)
- ரவி இந்த விளக்கமான பகிர்வுக்கும் உங்கள் ஊக்க உழைப்புக்கும் நன்றி. அவர் கூறியவாறு, பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் மாணவர்களுக்கு தரமான கருத்துகள் தரமான நல்ல தமிழில் கிடைக்க வேண்டும் என்பதே பெரும் குறிக்கோள்களுள் ஒன்று. ஆம்ப்பியர் என்று பாட நூலில் இருந்தால், அவர் யார், அவர் வாழ்க்கை வரலாறு என்ன என்றெல்லாம் இன்னும் சற்று விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் தமிழில் மிகக்குறைவாகவே இருந்துள்ளன. தமிழ் விக்கிப்பீடியா இப்படி எந்த ஒரு தலைப்பிலும் அது தொடர்பான பல கருத்துகளை தரமுடன் விளங்கும் ஒரு அறிவுக் கருவூலமாக விளங்க வேண்டும். மீண்டும் உங்கள் செய்திப் பகிர்வுக்குநன்றி.--செல்வா 12:42, 8 அக்டோபர் 2009 (UTC)
- மிக்க நன்றி ரவி. மேலும், தமிழ் விக்கி கட்டுரைகளை pdf கோப்பாக மாற்றும் வசதி செய்து தரப்படல் வேண்டும். இது மாணவர், ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனைய மொழி விக்கிகளில் இந்த வசதி உள்ளது. ஏன், தமிழ் விக்கிமூலம், விக்கிநூல் திட்டங்களில் இந்த வசதி உண்டு. இது குறித்து வழு பதியப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 12:53, 8 அக்டோபர் 2009 (UTC)
நன்றி செல்வா, சிறீதரன். pdf நூலாக்கம் குறித்து விக்கிமேனியா மாநாட்டில் உரையாடியதாக சுந்தர் சொன்னார். மேல் விவரங்கள் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்--ரவி 15:31, 8 அக்டோபர் 2009 (UTC)
அம்புலிமாமா
தொகு- http://www.chandamama.com/lang/story/stories.php?lng=TAM&mId=12&cId=45&sbCId=107&stId=1153
- http://www.chandamama.com/lang/story/stories.php?lng=TAM&mId=12&cId=36&stId=1296
தமிழ் விக்கிப்பீடியா பெயர் குறிப்பிட வேண்டி அம்புலிமாமா ஆசிரியருக்கு மின்மடல் அனுப்பினோம். இனி, உரிய முறையில் பெயர் குறிப்பிட்டு எழுதுவதாக ஆசிரியர் பதில் அளித்துள்ளார். பார்க்க: பேச்சு:வரையாடு.
பத்திரிகைகள்
தொகுதினமலர்
தொகுதினமலர் முதற்பக்கத்தில் "இன்று.." என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே எடுக்கப்பட்டுள்ளன. --Kanags \பேச்சு 11:59, 11 அக்டோபர் 2009 (UTC)