விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2009

தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாளைக்கு, ஒரு மாதத்துக்கு எத்தனை முறை பார்க்கப்படுகின்றது? தொகு

  • இங்கே கணித்து இட்டுள்ளவாறு நாளொன்றுக்கு (சூன் 2009 இல்) 54,000 முறை பார்க்கப்பட்டது. ஒரு மாதத்தில், 1,600,000 (1.6 மில்லியன்) முறை பார்க்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 2300 முறை பார்க்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சூன் 2008 இல் இருந்து ஏறத்தாழ இதே அளவு பார்க்கப்பட்டு வந்துள்ளது.
  • பிற தளங்களிலும் இப்படிப்பட்ட குறிப்புகள் கிடைத்தால் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

--செல்வா 21:26, 29 ஜூலை 2009 (UTC)

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களின் பார்வை எண்ணிக்கை தொடர்பான அட்டவணை ஒப்பீட்டுக்காகக் கீழே தரப்பட்டுள்ளது.

மொழி பார்வைகள் (சூன் 2008) ஓராண்டில் மாற்றம் அதிகூடிய அளவு (சன.08 க்குப் பின்) அதிகூடிய பார்வை பெற்ற மாதம்
இந்தி 3.0M +52% 3.0M சூன் 09
வங்காளி 1.7M -13% 2.6M மார்ச் 09
தமிழ் 1.6M +12% 3.2M ஏப்ரல் 08
மலையாளம் 1.6M +36% 1.6 சூன் 09
மராட்டி 1.4M -14% 1.8M மார்ச் 09
தெலுங்கு 1.4M -31% 2.4M மே 08
பிஷ்ணுப்பிரியா
மணிப்புரி
1.1M -38% 2.0 மே 08
கன்னடம் 465K -8% 651K மார்ச் 08

இதன்படி தமிழ், மலையாளத்துடன் இந்திய மொழிகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 சனவரிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவின் பார்வை எண்ணிக்கை 12% கூடியுள்ளது எனினும் தமிழின் அதி கூடிய பார்வை எண்ணிக்கையான 3.2M (ஏப்ரல் 2008) உடன் ஒப்பிடும் போது இது 100% குறைவாக உள்ளது. 2008 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான பார்வை எண்ணிக்கைகள் அவற்றுக்கு முன்னரும் பின்னருமான பார்வை எண்ணிக்கைகளைவிட மிகவும் கூடுதலாக இருப்பது ஏன்? கணிப்புப் பிழையாக இருக்குமோ? இக் கணிப்புச் சரியாக இருந்தால் 2008 சனவரிக்குப் பின் இந்திய மொழிகளில் அதிகூடிய பார்வை பெற்றது தமிழ் விக்கிப்பீடியாவே. ஏன் பின்னர் குறைந்தது என்பதையும் அறியவேண்டும். 2008 ஏப்ரலில் 3.2M ஆக இருந்தது அடுத்த மாதமே 56% க்கு மேல் குறைந்து 1.4M க்கு வந்துவிட்டது. அதன்பின்னர் படிப்படியாக 1.9M வரை சென்று இப்போது 1.6M அளவில் உள்ளது. எல்லா மொழிகளிலுமே இவ்வாறான சடுதியான ஏற்றங்களும் இறக்கங்களும் அவ்வப்போது நிகந்துள்ளதைக் கவனிக்க முடிகிறது. இந்தியிலும், மலையாளத்திலும் இந்தமாதம் இது நிகழ்ந்துள்ளது. உண்மையில் இந்தியின் பார்வை எண்ணிக்கையைச் சராசரியாக 2.4M ஆகவும் மலையாளத்தின் எண்ணிக்கையை 1.2M ஆகவும் கருதமுடியும். கன்னடம் இவ்வளவு பின்தங்கியுள்ளதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? மயூரநாதன் 08:00, 31 ஜூலை 2009 (UTC)

பயனர் கணக்குகள் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியது தொகு

  • 10,002 பயனர் கணக்குகள் - சூலை 16 2009
    • ஒப்பீடு:
      இந்தி 16,937
      மலையாளம் 11,718
      தெலுங்கு 10,520
      தமிழ் 10,002
      வங்காளி 7,062
      மராத்தி 6602

--செல்வா 04:00, 17 ஜூலை 2009 (UTC)

சூன் 2009 வரையிலான விக்கிப்பீடியா தர அளவீடுகள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பருவளவு இப்பொழுது 91 மெகா பை'ட். பொதுவாக ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ 2 மெகா பை'ட்டே கூட்டுவோம், மே மாதத்திலிருந்து சூன் மா மாதத்துக்கு 4 மெகா பை'ட் கூடியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். அதே போல சராசரி கட்டுரையின் அளவும் சூன் மாதத்தில் 1720 பை'ட் (முன்னர் 1690), நாளொன்றுக்கான புதிய காட்டுரைகளின் எண்ணிக்கையும் 7 இல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது (ஆனால் அதற்கு முன் உள்ள 3 மாதங்களில் 15, 16, 13ஆக இருந்தது)

மொழி Month Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் சூன் 2009 19 k 18 k 1720 81% 22% 91 MB 3.7 M 8.9 k

இந்தி மொழி விக்கி இப்பொழுது தமிழைக் குறிப்பிடத்தக்க அளவில் சில தர அளவீடுகளில் வென்றுள்ளது. மே மாதத்திற்கான தர அளவீடுகளிலேயே இந்தி மொழி விக்கியின் பருவளவு 109 மெகா பை'ட்டும், கட்டுரை எண்ணிக்கை (200 எழுத்துகளுக்குக் கூடுதலானவை 19k, மொத்த கட்டுரை எண்ணிக்கை 33k) அளவிலும் கூடியும் உள்ளது. இந்தி மொழியில் சராசரி கட்டுரை அளவு 1166 பை'ட் என்றாலும், நல்ல முன்னேற்றம். மலையாளமும், இந்தியும் தமிழோடு சேர்ந்து மிக நல்ல வளர்ச்சி அடைந்த இந்திய மொழி விக்கிகள். மலையாளத்தில் 10k கட்டுரைகளே இருந்தாலும், அவர்கள் மொழியின் பருவளவு 74 மெகா பை'ட். சராசரி கட்டுரை அளவு 2522 பை'ட். 2 kb அளவை மீறிய கட்டுரைகள் 32% (தமிழில் கூடுதலான எண்ணிக்கையில் உள்ள கட்டுரைகளில் இது 22%, இந்தி 11%). 2 கிலோ பை'ட் அளவைத் தாண்டிய கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கையில் தமிழே முதல். --செல்வா 17:32, 8 ஜூலை 2009 (UTC)

மார்ச் 2009 வரையான விக்கிப்பீடியா தர அளவீடுகள் தொகு

இப்பொழுதும் 200 எழுத்துகளுக்கும் கூடுதலான எண்ணிக்கையில் தமிழே இந்திய மொழிகளில் முதலாவதாக உள்ளது (தெலுங்கு 14 K, இந்தி 15 K, மராத்தி 7.2K (Feb), வங்காளி 13 K, மணிபுரி 21 K ஆனால் ஓராண்டாக இதே நிலையில் உள்ளது மற்ற அளவீடுகளில் குறைவாகவே உள்ளது)

மற்ற எல்லா அளவீடுகளில் மலையாளம், தமிழ், இந்தி இவை முறையே முன்னணியில் உள்ளன. மலையாளத்தில் சனவரி கணக்குப்படி 200 எழுத்துகளைக் கடந்த கட்டுரைகள் 8.5 K மட்டுமே இருந்தாலும் மற்ற தர அளவீடுகளில் முன்னணியில் உள்ளது. சராசரி பை'ட் அளவு 2466, 0.5k அளவு கட்டுரைகள் 79%, 2k அளவுள்ள கட்டுரைகள் 31%. தமிழுக்குப் போட்டியாக மலையாளம் உள்ளது. இந்தியும் மிக நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றது. தமிழை விரைவில் மிஞ்சும். நாளொன்றுக்கு 70-80 கட்டுரைகள் இந்தியில் எழுதப்பபடுகின்றன.--செல்வா 04:36, 15 மே 2009 (UTC)[பதிலளி]

மொழி Month Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் மார்ச் 18 k 17 k 1667 81% 22% 83 MB 3.4 M 8.2 k
தமிழ் பிப்ரவரி 17 k 17 k 1658 81% 21% 81 MB 3.2 M 7.9 k
தமிழ் சனவரி 17 k 17 k 1639 81% 21% 79 MB 3.1 M 7.6 k

--செல்வா 04:36, 15 மே 2009 (UTC)[பதிலளி]

சனவரி 2009 வரையான விக்கிப்பீடியா தர அளவீடுகள் தொகு

மொழி Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 17 k 17 k 1639 81% 21% 79 MB 3.1 M 7.6 k