விக்கிப்பீடியா:தலைப்புத் தெரிவுக்கான உதவி
இப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றுவதற்காக நடத்தப்படுவதால் கட்டுரைக்கான தலைப்புகளைத் தெரிவு செய்யும்போது ஏற்கெனவே தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத தலைப்புக்களைத் தெரிவு செய்யவேண்டியது முக்கியமானது. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு குறித்த தலைப்பில் கட்டுரை உள்ளதா என்பதை அறிவதற்குப் பின் வரும் வழிகளைப் பயன்படுத்தலாம்:
- தமிழ் விக்கிப்பீடியாவின் எல்லாப் பக்கங்களிலும் இடது பக்கத்தில் ஒரு தேடல் பெட்டி இருக்கும். அப்பெட்டியுள் தலைப்பை அச்சிட்டுச் "செல் என்னும் பொத்தானை அழுத்தினால், குறித்த தலைப்பில் கட்டுரை இருந்தால் அப்பக்கம் திறக்கும். இல்லாவிட்டால் அக் கட்டுரை இன்னும் எழுதப்படவில்லை என்னும் தகவல் கிடைக்கும். எனினும், ஒரு தலைப்பைப் பல்வேறு எழுத்துக்கூட்டல்களில் எழுத முடியும் என்பதால், குறித்த கட்டுரை தேடலில் அகப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு.
- அனைத்துப் பக்கங்கள் என்னும் இணைப்பினூடாகச் சென்று, வரும் பக்கத்தில் அகர வரிசைப்படி தலைப்புக்கள் ஒழுங்கு செய்யப்ப்படிருக்கும். அப் பட்டியலில் தேடி அக்கட்டுரை உள்ளதா எனப் பார்க்கலாம்.
இது தவிர தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் காணப்படக்கூடிய சிவப்பு இணைப்புக்கள் அத்தலைப்புக்களில் கட்டுரை இல்லை என்பதைக் குறிக்கும். எனவே அத்தலைப்புக்களில் கட்டுரை எழுத முடியும்.
இணைப்புப் பக்கத்தில் உள்ள பட்டியலில், தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத தலைப்புக்கள் தரப்பட்டுள்ளன போட்டியாளர்கள் இப் பட்டியலிலிருந்தும் தமக்குப் பொருத்தமான தலைப்புக்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பட்டியல்