விக்கிப்பீடியா:த.வி. வெளியுறவுச் செய்திகள்

தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக வெளியுறவுத் தொடர்பாளர்கள் எனும் பெயரில் அரசு அமைப்புகள் மற்றும் பெரும் தனி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கென தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் சிலரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்வு செய்யப்படுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை இப்பக்கத்தில் குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு

தொகு
  • வெளித்தொடர்புகளுக்காக தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) குழு ஒன்றுக்கான சேர்ந்தெடுப்பு நடக்கின்றது.பிப்பிரவரி 24, 2010 அன்று முடிவடையும். பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்
  • சேர்ந்தெடுப்பின் முடிவுகள் வெளியாகிவிட்டன. வெளியுறவுக்காக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள்:
  1. மயூரநாதன் - நடுக் கிழக்கு நாடுகள்
  2. சிறீதரன் கனகு - ஆத்திரேலியா
  3. நற்கீரன் - கனடா
  4. சிவக்குமார் - கோவை
  5. செல்வா - கனடா
  6. சுந்தர் - பெங்களூர் (இந்திய விக்கிமீடியா சிறகத்தின் சார்பாக)
  7. ரவி - கோவை
  8. மணியன் - வட இந்தியா (மும்பை)
  9. கலையரசி - ஐரோப்பா (நோர்வே)
  10. கார்த்திக்பாலா - ஐக்கிய அமெரிக்கா
  11. பரிதிமதி - சென்னை
  12. தேனி சுப்பிரமணி - தேனி

இக்குழுவின் செயற்பாடுகள், கருத்தாடல்கள் விக்கிப்பீடியா:வெளியுறவு தொடர்பாளர்கள் கூடலகம் என்னும் பக்கத்தில் பதிவாகும்.

2011 ஆம் ஆண்டு

தொகு

2010 ஆம் ஆண்டு வெளியுறவு தொடர்பாளர்களைத் தேர்வு செய்யப்பட்டவர்களே 2011 ஆம் ஆண்டுக்கும் தொடரலாம் என இரவி கூறிய கருத்து ஏற்கப்பட்டது. பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி விக்கிப்பீடியா வெளியுறவு தொடர்பாளர்கள்

இதையும் பார்க்க

தொகு