விக்கிப்பீடியா:வெளியுறவு தொடர்பாளர்கள் கூடலகம்

  • இப்பக்கத்தில் வெளியுறவுத் தொடர்பாளர்கள் கலந்துரையாடல்கள் இடம் பெறும். எந்தவொரு விக்கிப்பயனரும் குழுவினருக்கு தெரிவிக்க வேண்டிய முக்கியமான கருத்துகள் இருந்தால் இங்கும் தெரிவிக்கலாம்.
  • சேர்ந்தெடுப்பு முடிந்தபின்னர், முதற்கட்டமாக குழுவினர் இந்தக் குழு எப்படி இயங்க வேண்டும் (பொறுப்புக்காலம், குழு இயக்க முறைகள் பற்றிய அடிப்படை விதிமுறைகள் முதலியன) என்பன பற்றி கருத்தாடலாம். எ.கா. கூடுதலாக 2-3 பேரை சேர்ந்தெடுக்கவும், குறிப்பிட்ட பணிகளுக்காக சிறு குழுக்கள் இயங்குவதும் பற்றி குறிப்பிடலாம். இயக்க நடைமுறைகளை சுருக்கமாகவும் எளிமையாகவும் வைத்திருப்பது நல்லது. இதற்கான நேரச் செலவு குறைவாக இருந்தால் நல்லது.

--செல்வா 14:08, 24 பெப்ரவரி 2010 (UTC)

முன்மொழிவுகள்

தொகு

கீழ்க்காணும் முன்மொழிவுகளை இங்கு வைக்கின்றேன்:

  • இக்குழுவின் பொறுப்புக் காலம் திசம்பர் 31, 2010 வரை.
  • பொறுப்புக்காலம் முடிவதற்குள் எந்த உறுப்பினராவது விலக விரும்பினால் பொறுப்புக் காலம் முடியும் வரை வேறு ஓர் உறுப்பினரைத் சேர்ந்து எடுக்கலாம். ஒரே இடத்துக்கு இரண்டோ அதற்கு மேலுமோ பயனர்கள் விண்ணப்பித்தால், 3 நாட்கள் தேர்தல்நடத்தித் தேர்ந்து கொள்ளலாம்.
  • குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை 15 வரை உயர்த்தவோ, குறிப்பிட்ட பணிகளுக்காக சிறுகுழுவாக அமைத்துக்கொண்டு இயங்கவோ இக்க் குழுவுக்கு உரிமை உண்டு.
  • பயனர் மு. மயூரனையும் (இலங்கை) இன்னும் இரண்டு பேரையும் சேர்த்து இக் குழுவின் எண்ணிக்கையை 15 ஆக உயர்த்தவும்.
  • முக்கியமாக வரும் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளைச் சேர்க்கும் திட்டத்தில் தொடர்புகொள்ள பரிதிமதி (சென்னை), இரவிசங்கர் (கோவை), சுந்தர் (பெங்களூரு), ஆகிய மூவரும் தொடர்பாளர்களாக அறிவிக்கவும். மேலும் அவர்களுக்கு உதவ சிவக்குமார் (கோவை), செல்வா (கனடா), நற்கீரன் (கனடா), மயூரன் (இலங்கை) ஆகிய நால்வரையும் இதே மாநாட்டுப் பணிக்காக பின்புலத்தில் தொடர்பாளர்களாக அறிவிக்கவும்.

--செல்வா 01:01, 25 பெப்ரவரி 2010 (UTC)

ஆதரவு

தொகு
செல்வாவின் மேற்கூறிய முன்மொழிவுகளை நான் வழிமொழிகிறேன். --மணியன் 04:56, 25 பெப்ரவரி 2010 (UTC)
நானும் வழிமொழிகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:16, 25 பெப்ரவரி 2010 (UTC)
நானும் வழிமொழிகிறேன். --கார்த்திக் 06:51, 25 பெப்ரவரி 2010 (UTC)
நானும் வழிமொழிகிறேன்.--Kanags \உரையாடு 07:00, 25 பெப்ரவரி 2010 (UTC)
--ரவி 11:17, 25 பெப்ரவரி 2010 (UTC)
முன்மொழிவுகளை வழிமொழிகிறேன்.--Theni.M.Subramani 12:11, 25 பெப்ரவரி 2010 (UTC)

நன்றி=

தொகு

அனைவருக்கும் நன்றி. மேற்கூறியவற்றைச் செயல்படுத்துவோம். --செல்வா 06:15, 6 மார்ச் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல் பற்றி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தொகு

இந்து நாளிதழில் செய்தி

A competition would be launched next week for college students and their contributions in Tamil on different topics would be uploaded on the Wikipedia. Currently, only 22,000 articles were available in Tamil on the Wikipedia. About 30,000 more articles would be uploaded through the competition.

நாம் எதிர்பார்த்திருந்த நற்செய்தி. விக்கி நண்பர்களே இதில் நாம் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். உதவி செய்த ரவி, சுந்தர், மயூரநாதன், சிறீதரன், நற்கீரன், தேனி சுப்பிரமணி, பரிதிமதி மற்றும் பலருக்கும் நன்றி. தக்க பக்கங்களை அழகுடன் அமைத்து நெறிப்படுத்த வேண்டும்.--செல்வா 06:12, 6 மார்ச் 2010 (UTC)