விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அருளரசன்

Arularasan hosur.jpg

கு. அருளரசன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சேர்ந்தவர். செப்டம்பர் 2014 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். கர்நாடக மன்னர் மரபினரான மேலைக் கங்கர், சாளுக்கியர், மேலைச் சாளுக்கியர், போசளர், இராஷ்டிரகூட மன்னர்கள், மைசூர் உடையார்கள் ஆகிய மன்னர்கள் பற்றியும் கிருட்டிணகிரி மாவட்டம் பற்றியும் முதன்மையாகப் பங்காற்றி 624 கட்டுரைகள் எழுதியுள்ளார்.