விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கலாநிதி
கலாநிதி நவம்பர் 2005 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இவர் இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கணக்கியல், பொருளியல், தமிழ் இலக்கியம், பொது அறிவு, கணனி, அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை, இணைபயன் வளையீ, கிராமின் வங்கி, இலங்கை வரலாற்று நூல்கள், சோழர் இலக்கியங்கள், முகமது யூனுஸ், புலிநகக் கொன்றை ஆகியவை இவர் முதன்மையாக பங்களித்த கட்டுரைகளில் சில.