புலிநகக் கொன்றை (புதினம்)
புலிநகக் கொன்றை தமிழில் வெளிவந்த புதினங்களில் ஒன்றாகும்.பி. ஏ. கிருஷ்ணன் எழுதிய "Tiger Claw Tree" (பென்குயின் வெளியீடு) என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கமே "புலிநகக் கொன்றை" ஆகும். இதன் தமிழாக்கதினையும் மூல நூலாசிரியரே செய்துள்ளார்.
புலிநகக் கொன்றை | |
---|---|
நூல் பெயர்: | புலிநகக் கொன்றை |
ஆசிரியர்(கள்): | ஆங்கிலத்திலும் தமிழிலும் பி.ஏ.கிருஷ்ணன் |
வகை: | புதினம் |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | டிசம்பர் 2002 |
இடம்: | தமிழ் நாடு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 175 |
பதிப்பகர்: | காலச்சுவடு பதிப்பகம் |
ஆக்க அனுமதி: | பி.ஏ.கிருஷ்ணன் |
திருநெல்வேலி பகுதியில் இருக்கும் ஒரு தென்கலை ஐயங்கார் குடும்பத்தில் நான்கு தலைமுறைகளைப் பற்றிச் சொல்வதுடன் தமிழ் நாடு வரலாற்றுடன் ஓர் அழுத்தமாக இயைந்து போகிறது . பிராமணர்கள் பல காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட அரசியலியக்கங்களின் பலதளங்கள் நுட்பமாகவும் சகஜமாகவும் புதினத்தில் வருகின்றன. இது ஒர் அரசியல்,மனித உணர்வு சார் புதினமாக விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது.
கதை
தொகுகதை 1970ல் தொடங்கி பின்னோக்கி பயணிக்கிறது. பொன்னாம்மாள் சாகக் கிடக்கிக்கின்றாள் அவள் நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் சமையல்காரரின் ஒரே பெண்ணும் வட்டிக்கு பணம் கொடுக்கும் கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டி ஆவாள். பொன்னாக்கும் நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள்.
நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த சுதந்திர போராட்ட அலையில் கலந்து - வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறி விடுகிறார்.
இரண்டாவது மகன் பட்சி பெரிய வழக்கறிஞர் மிதவாத சுதந்திர போராட்ட இயக்கமான ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவர்.
மகள் ஆண்டாள் பால்ய வயதில் வாழ்க்கைப்பட்டு கன்னி கழியாமலேயே அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.
பட்சியின் ஒரே மகன் திருமலை வழக்கறிஞர். அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி ஒன்றின் விரிவுரையாளன்.திமுக ஆட்சி காலத்தில் திருநெல்வேலியில் பிராமண பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.
நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருப்பத்துடன் மக்களுக்கு இலவச மருத்துவ சேவையும் செய்கின்றார்கள்.
நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்தும் நம்பி தான் அவரைச் சந்திக்கஅங்கே போகிறான்.அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் - உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்வைக்கப்பட்டு, சித்திரவதையின் பின் விடுதலையாகி பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.
கிருஷ்ண ஐயங்கார்(பொன்னாவின் மாமனார்) கட்டபொம்மு வம்ச தாளவாய் சுந்தரத்திற்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட அந்தப் பாவம் தலைமுறை தலைமுறையாக நான்கு தலைமுறைக்குத் தொடர்வதாதனாலேயே அகால மரணத்திற்கு காரணமாக அமைவதாக கருதப்பட்டு முடிவில் பரிகாரம் செய்யப்படுகின்றது.
கண்ணன் தன் காதலியின் விருப்பப்படி ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதுடன் கதை முடிகிறது.
கதையின் போக்கு
தொகு18ம் நூற்றாண்டில் துவங்கி 1970 வரை 150 ஆண்டுகளாக நிகழத சமூக மாற்றங்களைதிருநெல்வேலியில் வசிக்கும் ஒரு பிராமண குடும்பத்தின் வாயிலாக அலசுகிறது சுதந்திரப் போராட்டம் மற்றும் அதற்குப்பின் நடந்த இந்திய அரசியல், சமுதாய மாற்றங்கள் என விரிகிறது கதை. தமிழகத்தில் வாழ்ந்த அனைத்து சுதந்திரத் தலைவர்களும் கதாபாத்திரங்களாகவே வருகிறார்கள். கட்டபொம்மன், மருது பாண்டியர், சிதம்பரம் பிள்ளை, திலகர், வாஞ்சிநாதன், வவேசு ஐயர், சுப்பிரமணிய பாரதி, இராஜாஜி, பெரியார், எம்ஜிஆர், எம் ஆர் ராதா போன்றவர்களும் கடவுள் மறுப்பு, கடவுள் ஆதரிப்பு, காங்கிரஸ் இயக்கம்,ஆஷ் கொலை,திமுக எழுச்சி,பொதுடைமை சித்தாந்தம் என பலசம்பவங்களும்,புதினமெங்கும் பரவியிருக்கிறார்கள் சில சமயங்களில் கதாப்பாத்திரங்களாக, சில சமயங்களில் விவரணைகளாக, சில சமயங்களில் உரையாடல்களாகவும்.