பி. ஏ. கிருட்டிணன்

தமிழ் எழுத்தாளர்

பி. ஏ. கிருஷ்ணன் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார், இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதுகிறார். அவர் தனது வாழ்க்கையை, ஒரு இயற்பியல் ஆசிரியராக தொடங்கினார். பல ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் ஒரு அதிகாரியாக பணிபுரிந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியில் சேர்ந்தார். பின்னர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ஆனார்.

எழுத்து

தொகு

இவரது புகழ்பெற்ற நாவல்கள் புலிநகக் கொன்றை மற்றும் கலங்கிய நதி. இவர் எழுதிய மேற்கத்திய ஓவியங்கள் பற்றிய கட்டுரை காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. இவரது எழுத்து  பல  இந்திய நாளிதழ்களிலும் இலக்கியப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து, பின்னர்  அவை தொகுத்து வெளீயிடப்பட்டுள்ளது. அவற்றுள் புகழ்பெற்றவை, அக்கிரகாரத்தில் பெரியார் மற்றும்  திரும்பிச் சென்ற தருணம். இவர் தமிழ் இலக்கியத்த தோட்ட நிறுவனத்தின் விருதுக் குழுவில் ஒரு ஆலோசகராக உள்ளார்.[1]

குடும்பம்

தொகு

கிருஷ்ணன் தற்போது மனைவி ரேவதியுடன் டெல்லியில் வசிக்கிறார். இவர்களது ஒரே மகன் சித்தார்த் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[2]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Judges - Tamil literary garden". Tamil Literary Garden. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  2. "P A Krishnan". Westland books. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._கிருட்டிணன்&oldid=3563159" இலிருந்து மீள்விக்கப்பட்டது