கலங்கிய நதி
கலங்கிய நதி ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இப்புதினத்தை எழுதியவர் பி. ஏ. கிருஷ்ணன் ஆவார். இப்புதினமானது காலச்சுவடு பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்நூல் பி.ஏ.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய த மட்டி ரிவர் (The Muddy River) என்பதன் தமிழாக்கம் ஆகும். இந்நூலை அவர் 2002 ஆம் ஆண்டே எழுதி முடித்துவிட்டார். பின்னர் மேலதிக திருத்தங்களை 2009 ஆம் ஆண்டில் செய்தார். இப்புதினத்தில் வரும் ரமேஷ் மற்றும் சந்திரன் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய கதை இது. மேலும் கதாப்பாத்திரம் காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கும்.[1] மேலும் கதையானது அஸ்ஸாமில் நடக்கும் தீவிரவாதம், கம்யூனிசம், அஸ்ஸாம் பூர்வீக குடிகளுக்கும் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்குமான பிரச்சினை, காந்தி என பல விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
வெளி இணைப்புகள்
தொகு- ஆசிரியர் பேட்டி
- விமர்சனம்
- விமர்சனம் பரணிடப்பட்டது 2016-08-23 at the வந்தவழி இயந்திரம்