விக்கிப்பீடியா:பயிற்சி வளங்கள்/உருவாக்கம்
தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை தொடர்பான பல்வேறு பயிற்சி வளங்கள் உருவாக்கம், முயற்சிகள் பற்றிய இற்றைகளை இங்கு பகிர்வோம்.
ஆகத்து 22, 23 பயிற்சி வள உருவாக்கப் பட்டறை
தொகுநம்முடைய பல்வேறு செயற்பாடுகளுக்கும் பயிற்சியே அடிப்படையாக இருப்பதால், இது தொடர்பாக கையேடுகள், நிகழ்பட உதவிக் குறிப்புகள் என்று பல்வேறு பயிற்சி வளங்களைத் தொழில்நேர்த்தியுடன் உருவாக்க வேண்டியுள்ளது. இவற்றை உருவாக்குவதற்கான பட்டறைக்கான உத்தேச தேதிகளாக ஆகத்து 22, 23 அமையும். இப்பட்டறை சென்னை த. இ. க. வளாகத்தில் அமைவது அவர்களின் படப்பிடிப்புத் தளம் உட்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். இப்பட்டறையில் கலந்து கொண்டு பங்களிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். கருத்துகளையும் பங்களிக்க விரும்புவோர் விவரங்களையும் கீழே பதிய வேண்டுகிறேன். சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)
- ஏற்கனவே பல முயற்சிகள் உள்ளன. இவற்றை பூரணப்படுத்தும் வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 13:45, 13 ஆகத்து 2015 (UTC)
- ஆகத்து 22, 23 அன்று சென்னையில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இப்பட்டறை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயன்றோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன். பொதுமக்கள் பார்வையில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா நோக்கிய கேள்விகள் என்ன, அவர்களுக்கு இலகுவாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் எப்படிப் பயிற்சி வளங்களை உருவாக்குவது என்ற அலசலுடன் தொடங்கி, அதன் அடிப்படையில் சில பயிற்சி வளங்களை உருவாக்க வேண்டும். இதனைச் செய்ய வரைகலை, தெளிவான பேச்சு, இத்தகைய பயிற்சி வளங்களை உருவாக்குவதில் அனுபவம், கற்பித்தல் அனுபவம் உள்ளோர் தேவை. விக்கிப்பீடியர்கள், கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் போக, தொழில்முறைச் சேவையாக இதில் சில திறன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்றும் பார்க்கிறோம். எப்படியாயினும், இது இரு நாளில் முடிகிற வேலையாகத் தெரியவில்லை :) ஆனால், அதற்கான தொடக்கமாக அமையும். விவரங்களை இங்கு இற்றைப்படுத்துகிறோம். --இரவி (பேச்சு) 20:08, 20 ஆகத்து 2015 (UTC)
- இந்நிகழ்வின் போது நடந்த உரையாடல்களை இங்கு கவனிக்கலாம். இவ்வார இறுதிக்குள் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வோருக்கு அளிக்கக்கூடிய 6,7 பக்க அளவிலான விக்கிப்பீடியா பயன்பாடு, பங்களிப்பு வழிகாட்டியை PDF வடிவில் உருவாக்க எண்ணியுள்ளோம்.--இரவி (பேச்சு) 12:32, 24 ஆகத்து 2015 (UTC)