விக்கிப்பீடியா:முதல் கட்டுரை/2

தமிழ் விக்கிப்பீடியா ஒவ்வொரு மாதமும் 60 இலட்சம் பக்கப் பார்வைகளுக்கு மேல் பெறுகிறது. இந்திய விக்கிப்பீடியாக்களில் இந்திக்கு அடுத்து கூடுதல் கட்டுரைகளையும் பயனர் வரத்தையும் கொண்டிருப்பது தமிழ் விக்கிப்பீடியாவே. இங்குள்ள கட்டுரைகளை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய,

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா?

இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்!

கீழே உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு "கட்டுரையைத் தொடங்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்து வரும் பெட்டி ஒரு மின்னஞ்சல் எழுதும் பெட்டி போல் இருக்கும். அதில் உங்கள் கட்டுரையை இட்டு, கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் எனும் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுவிடும்.


சில எளிய வழிமுறைகள்:

1. கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். தமிழில் எழுத மேலுள்ள 'தேடு' பெட்டியில் எழுதி இங்கு வெட்டி ஒட்டலாம். எல்லா இடங்களிலும் தமிழில் எழுத தமிழில் தட்டச்சு செய்ய உதவும் பக்கம் பாருங்கள்.

2. நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த புத்தகம், பயிலும் கல்வித் துறை, பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என்பது போன்று எந்த வகையான தலைப்புகள் குறித்தும் நீங்கள் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். பிறருக்குக் காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம். (ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள், அவை எழுதப்பட்டுள்ள மொழி நடை ஆகியவற்றைக் கவனித்தால் என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புரிந்துவிடும்.)

3. கட்டுரைகள் தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகளைத் தவிர்க்கவும்.

4. நீங்கள் எழுதும் கட்டுரைகள் உடனுக்குடன் மற்றவர்களின் பார்வைக்கு வரும். யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் அதனை நீக்காது, கூடுதலாகத் தகவலைச் சேர்த்துச் சேமிக்கலாம்.

5. தவறான தகவல், விளம்பர நோக்கம் போன்றவற்றைத் தவிருங்கள். அவ்வாறான தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

6. விக்கிப்பீடியா எழுதிப் பழக, விக்கிப்பீடியா:மணல்தொட்டி பயன்படுத்துங்கள்.

பிழை செய்து விடுவோமோ என்ற கவலையின்றி தயங்காது எழுதத் தொடங்குங்கள். மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். நன்றி!