விக்கிப்பீடியா:முன்தோற்றம்

"முன்தோற்றம் காட்டு" பொத்தான் "பக்கத்தை சேமிக்கவும்" பொத்தானிற்கு அடுத்ததாகவும் தொகுத்தல் சுருக்கத்தின் கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது

தொகுத்தல் பெட்டியின் கீழே முன்தோற்றம் காட்டு பொத்தான் உள்ளது. இதனை சொடுக்குவதன் மூலம் பக்கத்தை சேமிக்கும் முன்பாக பக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை நீங்கள் காண முடியும். இப்பயன்பாட்டை தவறாது பயன்படுத்துமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் தவறுகளையும் எண்ணியவண்ணம் வடிவமைப்பு மாற்றங்களையும் சரி செய்ய முடியும். தவிர இது பன்முறை சேமிப்பதை தவிர்க்கிறது. ஒரு கட்டுரையை உடனுடன் பன்முறை சேமிப்பது பயனர்களுக்கு என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என அறிய குழப்பத்தை உண்டு பண்ணும்; மேலும் விக்கிப்பீடியா:பக்க வரலாறு நெரிசலாக இராது.

ஒரு பக்கத்தை நகர்த்தும் முன்னர், பிரிக்கும் முன்னர் அல்லது பத்திகளை மாற்றியமைக்கும் முன்னர் சேமிப்பது நல்லது. வேறுபாடு காட்சியில் பத்தி அமைப்பு மாற்றங்கள் காட்டப்படாது. குறிப்பாக சிறு தொகுப்புகளை அடுத்து பத்திகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அவை சரியாகக் காட்டப்படுவதில்லை.

ஒரே முறையில் பக்கத்தைச் சேமிப்பது தொகுத்தல் மோதல்கள் தவிர்க்கவும் உதவும். அண்மைய மாற்றங்களில் தொகுக்கப்படும் பக்கம் வராதாகையால் அதேநேரம் பிற பயனர்களுக்கு அந்தப் பக்கத்தைத் தொகுக்கும் எண்ணம் வர வாய்ப்புக் குறைவு ! நீங்கள் புகுபதிகை செய்திருந்தால், முன்தோற்றத்தை தொகுத்தல் பெட்டியின் பின்னர் காட்டப்படாது முன்னர் காட்டுமாறு உங்கள் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள முடியும்.இந்தத் தேர்வினை சொடுக்கியிருந்தால், நீங்கள் "முன்தோற்றம் காட்டு " பொத்தானை சொடுக்கும்போது தொகுத்தல் பெட்டியின் மேல் பக்கத்தின் முன்தோற்றம் காட்டப்படும். பார்க்க: உதவி:விருப்பத் தேர்வுகள்.

தன்னிச்சையான விக்கியாக்கத்தின்போது முன்தோற்றம் மாற்றப்பட்ட உரையைக் காட்டும்; "மாற்றங்களைக் காட்டு" பொத்தான் நீங்களிட்ட புதிய சொல்லைக் காட்டும். காட்டாக ~~~~ என்று இட்டால் முன்தோற்றம் காட்டு பொத்தானை அழுத்தினால் வரும் முன்தோற்றத்தில் இந்த தொகுத்தல் சுருக்கம் மாற்றப்பட்டு பயனர் பெயரை நேரத்துடன் காட்டும். அதேநேரம் "மாற்றங்களைக் காட்டு" காட்சியில் இடப்பட்ட ~~~~ மட்டுமே காட்டப்படும்.

முன்தோற்றத்தைக் காண்பதால் நீங்கள் புகுபதிகையிலிருந்து நேர வரையறுப்பால் வெளியேற்றப்படாதிருக்க முடிகிறது. இதனால் உங்கள் தொகுப்புகளைச் சேமிக்கும்போது அவை உங்களுடைய பங்களிப்புகளாக இருக்கின்றன. ஒவ்வொருமுறை நீங்கள் முன்தோற்றம் காணும்போதும் காலக்கணிப்பி மீண்டும் துவங்குவதால் எப்போதும் புகுபதிகையில் இருப்பீர்கள். மேலும் நீங்கள் புகுபதிகை செய்ய மறந்திருந்தால், முன்தோற்றம் காணும்போது உங்களுக்கு நினைவுறுத்தப்படும். நீங்கள் புகுபதிகை செய்யாதிருந்தால், "புகுபதிகை"யில் வலது சுட்டிட்டு வருகின்ற தேர்வுகளில் "புதிய சாளரத்தில் திற " என்று வேறு சாளரம் ஒன்றில் புகுபதிகை செய்யுங்கள். பின்னர் மீண்டும் "முன்தோற்றம் காட்டு" சொடுக்கினால் உங்கள் பங்களிப்பு உங்கள் பயனர்பெயருடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு செய்யும்போது "இது ஒரு சிறு தொகுப்பு" மற்றும் "இக்கட்டுரையைக் கவனிக்கவும்" கட்டங்கள் வெறுமையாகி இருக்கும். பக்கத்தைச் சேமிக்கும் முன்னர் நீங்கள் வேண்டியவாறு அவற்றில் குறியிட மறக்காதீர்கள்.

பெரும் மாற்றங்களை தொகுக்கும்போது அவ்வப்போது கணினியின் இடைநிலைப்பலகையில் நகலெடுத்துக் கொள்ளுங்கள். மிக அரிதான நேரங்களில், விக்கிப்பீடியா வழங்கிகள் தடுமாற, உங்கள் செய்த பங்களிப்பு வீணாகலாம்.

மேலும் முன்தோற்றம் காட்டு சொடுக்கியவுடன் இடது கருவிப்பட்டையிலும் தொகுத்தல் பொழிப்பு காட்டப்படுகிறது. "இப்பக்கத்தை இணைத்தவை" தொடுப்பு மூலம் உள்ளிணைப்புகளின் நிலையை சரிபார்க்கலாம்.