விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா மன்றம், எக்செல் பள்ளிகள், திருவட்டாறு/தொடக்க விழா

எக்செல் பள்ளிகளின் மாணவர் மன்றங்களின் தொடக்க விழா அழைப்பிதழ்
எக்செல் பள்ளிகளின் விக்கிப்பீடியா மன்றத்திற்கான இலச்சினை
விக்கிப்பீடியா மன்றத் தொடக்க விழாவிற்குச் சென்ற தேனி.மு.சுப்பிரமணிக்கு பள்ளி மாணவி ஒருவர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கிறார்
மாணவர் மன்றங்களுக்கான அமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்த நடைமுறைக் கையேட்டினை பள்ளிகளின் தலைவர் ஸ்ரீகுமார் வெளியிட பள்ளிகளின் முதல்வர் பிருந்தா ஸ்ரீகுமார் பெற்றுக் கொள்கிறார்
விக்கிப்பீடியா மன்றத்திற்கான அமைப்பு மற்றும் நடைமுறைக் கையேட்டினை பள்ளியின் தலைவர் ஸ்ரீகுமார் வெளியிட விக்கிப்பீடியா மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளரும் ஆசிரியருமான ஜெயகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார்
எக்செல் பள்ளிக்கான விக்கிப்பீடியா மன்றத்தின் இலச்சினையை தேனி.மு.சுப்பிரமணி வெளியிடுகிறார்
எக்செல் பள்ளிக்கான விக்கிப்பீடியா மன்றத்தின் இலச்சினையை தேனி.மு.சுப்பிரமணி வெளியிட பள்ளியின் விக்கிப்பீடியா மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளரும் பள்ளி ஆசிரியருமான ஜெயகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார்
விக்கிப்பீடியா மன்றத்தைத் தொடங்கி வைத்து விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா திட்டங்கள் குறித்து தேனி.மு.சுப்பிரமணி உரை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறுவிலுள்ள எக்செல் பன்னாட்டுப் பள்ளி (Excel Global School), எக்செல் மத்தியப் பள்ளி (Excel Central School), எக்செல் மேல்நிலைப் பள்ளி (Excel Higher Secondary School) எனும் மூன்று பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும் சேர்த்து விக்கிப்பீடியா மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா மன்றம் தொகு

எக்செல் பள்ளிகளில் வரலாறு மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், கணித மன்றம், புவியியல் மன்றம், விக்கிப்பீடியா மன்றம், குடிமை மன்றம், மெய்யியல் மன்றம், விண்வெளி மன்றம், அறிவியல் மன்றம், நாடக மன்றம் என்று மொத்தம் 11 மாணவர்களுக்கான மன்றங்கள் தொடங்கப்பட்டன. இவற்றுள் விக்கிப்பீடியா மன்றமும் ஒன்று.

மாணவர் மன்றங்கள் தொடக்க விழா தொகு

திருவட்டாறு எக்செல் பள்ளிகளின் கலையரங்கத்தில் நடைபெறவுள்ள 11 மாணவ மன்றங்களின் தொடக்க விழாவின் போது விக்கிப்பீடியா மன்றமும் தொடங்கப்பட்டது.

  • இடம்: எக்செல் பள்ளிகளின் கலையரங்கம், திருவட்டாறு.
  • நேரம்: காலை 10 மணி
  • தலைமை: முனைவர் சி. ஸ்ரீகுமார் (தலைவர், எக்செல் பள்ளிகள் மற்றும் இயக்குநர் மாணவர் மன்றங்கள்)
  • மாணவர் மன்றங்கள் அறிமுகம்: பிருந்தா ஸ்ரீகுமார் (முதல்வர், எக்செல் பள்ளிகள் மற்றும் முதன்மைத் தலைவர் மாணவர் மன்றங்கள்)
  • விக்கிப்பீடியா மன்றத்தைத் தொடங்கி வைத்தும் விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா திட்டங்கள் குறித்தும் சிறப்புரை: தேனி மு. சுப்பிரமணி, தமிழ் எழுத்தாளர்.
  • வரவேற்புரை: பி. கோபாலன், (நிர்வாக அதிகாரி, எக்செல் பள்ளிகள்)
  • நன்றியுரை: முனைவர் ஆலிவர் ஜான் சினைடர் (ஆசிரியர், எக்செல் பள்ளிகள்)

தேனி. மு.சுப்பிரமணி பேச்சுக் குறிப்புகள் தொகு

எக்செல் பள்ளிகளில் விக்கிப்பீடியா மன்றத்தைத் தொடங்கி வைத்தும், விக்கிப்பீடியா மன்றத்திற்கான இலச்சினையை வெளியிட்டும் உரையாற்றிய தேனி மு. சுப்பிரமணி பேச்சில் குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் இங்கு பார்வைக்காக...

  • இலாப நோக்கமற்ற உலகின் மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக விக்கிப்பீடியா செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பள்ளிகளில் சேவை நோக்கத்துடன் தன்னார்வத் திட்டங்களாக மாணவர்களுக்கான மன்றங்கள் பல தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேவைத் திட்டங்களில் ஒன்றாக விக்கிப்பீடியா மற்றும் விக்கிப்பீடியா திட்டங்களில் மாணவர்கள் பங்களிப்புகளுக்கான அமைப்பாக விக்கிப்பீடியா மன்றம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
  • இந்தியாவிலேயே மாணவர்களுக்கான விக்கிப்பீடியா மன்றம் முதன் முதலாக எக்செல் பள்ளிகளில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இது உலகின் முதல் பள்ளியாகக் கூட இருக்கும் வாய்ப்புமிருக்கிறது.
  • விக்கிப்பீடியாவின் மாணவர் மன்ற அமைப்பை முதன் முதலாகத் தொடங்கி வைத்த பெருமை எனக்குக் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
  • இந்தப் பள்ளி தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் இரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இருக்கின்றனர். எனவே இந்தப் பள்ளிகளின் பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலம் மொழியிலான விக்கிப்பீடியாவிலும், மாணவர்களின் தாய்மொழிக்கேற்ப தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலான விக்கிப்பீடியாக்களிலும் பங்களிப்பது குறித்து பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
  • இலாப நோக்கமின்றி செயல்படும் விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விக்கிப்பீடியா மன்றம் தொடங்க கல்வி நிறுவனங்கள் முன் வர வேண்டும்.

படத் தொகுப்பு தொகு