விக்கிப்பீடியா:வழிமாற்று
(விக்கிப்பீடியா:R இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரைப் பக்கத்தைத் திறக்கும் போது தானியக்கமாக இன்னொரு பக்கத்துக்குச் செல்லும் படி செய்தல் “வழிமாற்று”தல் அல்லது “மீள்வழி” ப் படுத்துதல் எனப்படுகிறது.
எப்படி செய்வது
தொகுஒரு பக்கத்தை இரண்டாம் பக்கத்துக்கு வழிமாற்ற முதல் பக்கத்தில் உள்ளடக்கங்களை அழித்து விட்டு பின்வரும் நிரல்துண்டை இடவேண்டும்
#வழிமாற்று [[இரண்டாம் பக்கத்தின் தலைப்பு]]
அல்லது
#REDIRECT [[இரண்டாம் பக்கத்தின் தலைப்பு]]
எ.கா. “தமிழகம்” என்ற பக்கத்தை “தமிழ்நாடு” என்ற பக்கத்துக்கு வழிமாற்ற வேண்டுமென்றால், “தமிழகம்” பக்கத்தில் பின்வரும் நிரல் துண்டை இட வேண்டும்:
#வழிமாற்று [[தமிழ்நாடு]]
எதற்காக பயன்படுத்தலாம்
தொகுவழிமாற்றுகளை பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்
- ஒரே கட்டுரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் பொருத்தமானவையாக உள்ள போது
- ஒரு கட்டுரையின் தலைப்புக்குக்கு குறுக்கங்கள் உள்ள போது
- ஒரு கட்டுரை தலைப்புக்கு தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துப்பெயர்ப்புகள் உள்ள போது
- விக்கிப்பீடியா கொள்கை மற்றும் திட்ட பக்கங்களுக்கு குறுக்குவழிகள் ஏற்படுத்த
எதற்கு பயன்படுத்தக் கூடாது
தொகு- தமிழ் தவிர பிற மொழி எழுத்துகளில் தலைப்புகளை உருவாக்க (குறுக்குவழி பக்கங்கள் இதற்கு விதிவிலக்கு)
- ஒரு சொல்லின் விகுதிகள் சேர்ந்த வடிவங்களுக்கு, எ.கா “தமிழ்நாட்டில்” என்ற தலைப்பில் “தமிழ்நாடு” பக்கத்துக்கு, வழிமாற்று உருவாக்கக் கூடாது. இதற்கு பதில் கட்டுரைகளில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] என்று பயன்படுத்த வேண்டும்.
- நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. எடுத்துக்காட்டு: ஃபிஷ். விதிவிலக்கு: தனித்தமிழ் இயக்கத் தாக்கத்துக்கு முன்பு தமிழரிடையே வழக்கில் இருந்த வடமொழி, ஆங்கிலம் அல்லா பிறமொழிச் சொற்கள்.
தொடர்புடைய தலைப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுmeta:redirect - மீடியாவிக்கி மென்பொருளில் வழிமாற்றுகள் பற்றி அறிந்து கொள்ள