விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 21, 2008

செல்வழி கடத்தல் ? விளக்கினால் நன்றாக இருக்கும் వినోద్  வினோத் 17:09, 20 மார்ச் 2008 (UTC)

விக்சனரியைப் பார்க்கவும் ;) hijack--Terrance \பேச்சு 03:46, 21 மார்ச் 2008 (UTC)

உதவிக் கேள், உதவி கேள் எது(ச்???) சரி?--Terrance \பேச்சு 04:03, 21 மார்ச் 2008 (UTC)

உதவி கேள் என்பதே சரியெனத் தோன்றுகிறது. உதவிக் கேள் என எங்கும் படித்ததாக/கேட்டதாக நினைவில்லை--சிவகுமார் \பேச்சு 05:39, 21 மார்ச் 2008 (UTC)
இகரத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து க,ச,ப,த வந்தால் அவை இரட்டிக்கப்படவேண்டும் தானே?
அத்திப்பழம், உதவிக்கரம், --Terrance \பேச்சு 07:06, 21 மார்ச் 2008 (UTC)

டெரன்ஸ், இனிமேல் "விக்சனரியைப் பாருங்கள்" என்று துணிவாகச் சொல்லலாம் :) பிறகு, இகரத்தில் முடியும் சொற்கள் என்று ஏதும் இலக்கண விதி இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் குழப்பத்துக்கு இலகுவாக விடை காணலாம். அத்திப்பழம், உதவிக் கரம் ஆகியவற்றில் அத்தி, பழம், உதவி, கரம் ஆகிய அனைத்துமே பெயர்ச்சொற்களாகவும் முன்னைய சொல் அடுத்த சொல்லைச் சிறப்பித்துக் கூறுவதையும் காணலாம். அதாவது வெறும் பழம் என்று சொல்லாமல் என்ன பழம் என்ற கூடுதல் பண்பையும் விளக்குகிறது. இந்த இடங்களில் சந்தி வரும். எடுத்துக்காட்டுக்கு, காட்டுப்பாதை, மொழிப்பாடம். ஆனால், கேள் என்று சொல் வினைச்சொல்லாக இருக்கிறது. தவிர அது முந்தைய சொல்லின் தொடர்ச்சியும் அன்று. எனவே உதவி கேள் என்பதே சரியாக இருக்கும். ask help = உதவி கேள்; help and ask = உதவிக் கேள் என்று வரும் என நினைக்கிறேன். இன்னொரு எடுத்துக்காட்டு - சுட்டிக் காட்டு = point out; சுட்டி காட்டு = show the pointer :) . எது சரி என்று கேட்பது தான் சரி. இதற்கு விளக்கமோ விதிகளோ சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் எங்குமே எதுச் சரி என்று எழுதிப் பார்த்தது இல்லை--ரவி 14:31, 21 மார்ச் 2008 (UTC)

நன்றி ரவி--Terrance \பேச்சு 17:53, 21 மார்ச் 2008 (UTC)

பயணம், பயணி, பயங்கரவாதி - தமிழ்ச் சொற்கள் தேவை

தொகு

terrorist, extremist இருவரையும் தீவிரவாதி என்றே சொல்வது சரி இல்லை. பயங்கரவாதி என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன?

அப்புறம், பயணம், பயணி - இவற்றுக்கான தமிழ்ச் சொற்கள்?--ரவி 14:42, 21 மார்ச் 2008 (UTC)

Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 21, 2008".