விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 14, 2010

  • "யங் இந்தியா" எனும் பத்திரிகையில் கடைசி வரை ஒரு விளம்பரம் கூட இடம் பெறவில்லை.

இத்தகவல் சரி தானா? ஆங்கில விக்கியில் உள்ள en:Young India கட்டுரையில் தரப்பட்டுள்ள பத்திரிகைப் படிமத்தைப் பாருங்கள். முதற்பக்கமே விளம்பரங்களால் நிரப்பப்பட்டுள்ளன.

  • ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.

இந்த தஜீரா ஆறு ஆப்பிரிக்காவில் எங்கே ஓடுகிறது? எந்தக்கடலில் உற்பத்தியாகிறது? ஆங்கிலத்தில் இதனை எவ்வாறு அழைக்கிறார்கள்? இந்த தஜீரா ஆறு பற்றி ஒரு குறுங்கட்டுரையாவது தமிழ் விக்கியில் எழுதுவது நல்லது.

  • சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.

100 மடங்கு என்பது சரியான மதிப்பீடா அல்லது ஒரு அண்ணளவான மதிப்பா?

விக்கிப்பீடியாவில் இப்படியான (தரவுகளற்ற) தகவல்கள் வெளியிடுவது அவ்வளவு நல்லதல்ல.--Kanags \பேச்சு 10:05, 15 பெப்ரவரி 2010 (UTC)

__________________________________________________________________________________

  • காந்தியடிகள் நடத்திய யங் இந்தியா பத்திரிகையில் விளம்பரம் எதுவும் இடம்பெறவில்லை என்பது நான் இதழியல் பாடம் படித்த போது படித்ததுதான். அதற்கு சில ஆதாரங்கள்[1],[2] உள்ளன.
  • தஜீரா ஆறு குறித்த செய்தி ஒரு பொது அறிவுத் தகவல் புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இது குறித்த விபரங்களை முழுமையாக்க முயல்கிறேன்.
  • நாய்களின் மோப்பசக்தி குறித்த துணுக்குச் செய்தியும் ஒரு இதழில் வெளியானதுதான். மனிதனைக் காட்டிலும் நாய்களின் மோப்பசக்தி அதிகம் என்பதில் வேறுபாடுகளில்லை. அதை வெளிப்படுத்தும் தகவல்கள் மாறுதல்களாயிருக்கின்றன. [3],[4],[5]

--Theni.M.Subramani 15:59, 15 பெப்ரவரி 2010 (UTC)

முதலாவது தகவல் பிழை என்பது தெரிகிறது. எனவே அதனை முதற்பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறேன். தஜீரா ஆறு குறித்த தகவல் முழுமையாக இல்லை. முடிந்த வரையில் விக்கியிலுள்ள கட்டுரைகளில் இருந்து தகவல்களைப் பெறுவது நல்லது.--Kanags \பேச்சு 07:44, 16 பெப்ரவரி 2010 (UTC)

மேற்கோள்கள்

தொகு
  1. அன்புடன் குழுமத்தில் வந்த இந்திய பத்திரிகைகள் தினம்- சனவரி 29 செய்தி
  2. தமிழ்வாணன் இணைய இதழ் செய்தி
  3. அக்கறை அக்டோபர்-07 கூட்டம்
  4. நாயின் மோப்ப சக்தி செய்தி
  5. நாய்கள்: ஆதிரை

__________________________________________________________________________________

விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 14, 2010 பக்கத்தில் தவறான தகவல் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது :

அதில் கூறப்படுவது :

//2010 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை- 4, திங்கள் கிழமை -4, செவ்வாய்க் கிழமை -4, புதன் கிழமை -4, வியாழன் கிழமை -4, வெள்ளிக் கிழமை -4, சனிக் கிழமை -4. இப்படி கிழமைகளின் சமவாய்ப்பு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது.//

லீப் ஆண்டுகளில் பெப்ரவரி மாதத்தில் 29 நாட்கள். 29= 4x7+1 என்பதால் ஒரு லீப் பெப்ரவரியில் மட்டும் முதல் திகதி அமையும் தினம் (கிழமை) 5 தடவைகள் வரும் - 1,8,15,22,29 ஆகிய 5 திகதிகளில் தினம் ஒன்றே. ஏனைய எல்லா தினங்களும் 4 தடவைகள் வரும் வரும்.

லீப் அல்லாத (அந்த 2010 உட்பட) ஆண்டுகளில் பெப்ரவரி மாதத்தில் 28 தினங்கள் (28=4x7) எனவுள்ளதால் அம்மாதத்தில் ஒவ்வொரு தினமும் சரியாக 4 தடவைகள் வரும்: (1,8,15,22), (2,9,16,23), ....(7,14,21,28).

அதாவது தாங்கள் குறிப்பிடும் கிழமைகளின் சமவாய்ப்பு, 4 வருடங்களுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டுகள் அல்லாத மற்றயை எல்லா ஆண்டுகளின் பெப்ரவரியில் நிகழ்தே. 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது தவறுதானே? வேறு ஏதாவது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறையான விசேடமான நிகழ்வு உள்ளதா?

~சேது

சேது, நீங்கள் சொல்வது சரியானது. இத்தகவலை முதற்பக்கத்தில் இருந்து இப்போதைக்கு நீக்கியிருக்கிறேன். இத்தகவலை இட்ட தேனி அவர்கள் சரியான விளக்கத்துடன் வருவாரெனில், அதனை மீள இடலாம். நன்றி சேது.--Kanags \உரையாடு 08:59, 22 பெப்ரவரி 2010 (UTC)
Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 14, 2010".