விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கவர்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Paramatamil in topic குறிப்பிடத்தக்கமை விரிவாக்கம்
குறிப்பிடத்தக்கமை விரிவாக்கம்
தொகுநாம் எப்போதும் ஆங்கில விதிகளைப் பின்பற்றினாலும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற குறிப்பிடத்தக்கமை உணர்ந்து கட்டுரைகளை ஏற்று கொண்டுவருகிறோம். ஆனாலும் சில வேளைகளில் குழப்பமேற்படுவதை உணர முடிகிறது. உதாரணமாக ஒரு எழுத்தாளரின் குறிப்பிடத்தக்கமை, துணை வேந்தரின் குறிப்பிடத்தக்கமை, அரசியல் ஆளுமைகள் என்று பல கட்டுரைகளில் வழிகாட்டல்கள் இல்லாமல் உரையாடல்கள் பல கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆங்கிலத்தில் இல்லாத ஆனால் தமிழ்ச் சூழலில் தேவைப்படக் கூடிய விதிகளைப் பரிந்துரைத்து, உரையாடி இணக்கமுடிவினை எட்டி அவற்றைப் பின்பற்றாலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இவ்வாறு குறிப்பிடத்தக்கமையை விரிவாக்கலாமா என்று மற்றவர்கள் ஏற்றுக் கொண்டபிறகு சில பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:24, 25 ஆகத்து 2022 (UTC)
- சரியான முன்னெடுப்பு. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:44, 25 ஆகத்து 2022 (UTC)
- நல்ல முயற்சி.-இரா. பாலாபேச்சு 11:29, 30 ஆகத்து 2022 (UTC)
- 'நனைகவுள் யானையால் யானை யாத்தற்று' என்று சொல்லத்தக்க நற்பணி. வாழ்த்துகள் Paramatamil (பேச்சு) 07:11, 31 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம், நீச்சல்காரன் நேரடியான மொழிபெயர்ப்புப்பணியை நிறைவு செய்துவிட்டேன். குறை நிறை இருப்பின் பொறுத்துக்கொண்டு, பிற சக விக்கிப்பீடியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு செய்யவேண்டியதை செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:16, 4 செப்டம்பர் 2022 (UTC)