விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையம் நூலில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
Ginger என்னும் பயனர் மிகுந்த காழ்ப்புணர்வோடு பிற விக்கிப்பயனர்களைத் தாக்குகின்றார். அவருடைய கருத்துப் படி தமிங்கிலத்தில் எழுதவேண்டும் என்று விரும்புகின்றார். அது அவருக்குச் சாய்வாகத் தெரியவில்லை. அவருடைய கருத்துகளைப் பார்க்க விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி என்னும் பக்கத்தை பார்க்கலாம். கூட்டாக எழுதும் ஓர் ஆக்கம் என்பதனையும், தமிழ் மொழியில் அடிப்படை இலக்கணம், மொழி இயல்புகளைப் பின்பற்றி நல்ல கட்டுரை நடையில் இருக்க வேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொள்ளாதவர். தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ்ச் சொற்களை பற்றியும், கருத்துகளை எவ்வாறு கட்டுரை நடையில் எழுத வேண்டும் என்பதனையும் அறியாமல் பேசுகிறார். சீர்தரம் பேணப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்ளாதவர். புழக்கத்திலில்லாத என்று எழுத வேண்டியதைப் புழக்கத்திலுள்ளாத என்று அவர் எழுதுவது போல ஏராளமான இடங்களில் தமிழில் எப்படி எழுத வேண்டும் என்று அறியாமலும் தமிழைத் தாறுமாறாகவும் பயன் படுத்துகிறார். எழுத்துப்பிழைகள் நேர்வது யாருக்கும் நிகழ்வதுதான், ஆனால் விடாது "-கிரது" என்றும் வேறு பல்வேறு பிழைகளும் மலிய எழுதுகிறார். தமிழில் நல்ல ஆக்கப்பணிகள் செய்வதை எதிர்ப்பதும், விடாது இடையூறு தருவதும், தமிழ் மொழியை வலிந்து கெடுத்து எழுதத் துணைபோவதுமே இவருடைய போக்காக இருக்கின்றது. இவருடைய கருத்துகளும் நடத்தையும் இங்கு வரலாற்றுப் பதிவாக இருக்கும்/இருக்கட்டும். --செல்வா 16:35, 10 ஜூலை 2009 (UTC)
- உங்கள் சாய்வுகளோடு ஒத்துப் போகாவிட்டால் `காழ்புணர்வு`, `தமிங்கிலம்` என குற்றச் சாட்டுகள். நீங்கள் செய்வது பல விக்கியின் அடிப்படை கொள்கைகளுக்கு அப்பால் பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நடை வழிகாட்டியையும், மற்ற விக்கி நியதிகளையும் படிக்க வைக்கின்றவர்களால் மற்றவர்கள் `தமிங்கிலம்` குற்றம் சாட்டப்படுவது பெரிய முரண்நகை--Ginger 16:55, 10 ஜூலை 2009 (UTC)
- `புழக்கத்தில் உள்ளாத` என்பது `புழக்கத்தில் உள்ள` என்பதின் எதிர். உள்ளாத என்று இப்பொருளில் தெரிந்த பயந்தான். உதாரணமாக - இரா.கி.என்பவர் http://valavu.blogspot.com/2009/01/2.html இல் ”நம் உரையாடலுக்குள் உள்ளாத காரணத்தால் ...” என எழுதுகிறார். `உள்ளாத’ என்பது எல்லோருக்கும் தெரிந்த சொல்லாடல்--Ginger 19:52, 10 ஜூலை 2009 (UTC)
உள்ளுதல் என்றால் எண்ணுதல், கருதுதல் என்று பொருள். உள்ளாத என்றால் எண்ணாத, கருதப்படாத என்று பொருள். உரையாடலுக்குள் உள்ளாத என்றால் உரையாடலுக்குள் கருதப்படாத என்று பொருள்படுவது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் சொல்லாட்சியைப் பலரும் அறிவர்.திருக்குறளில் புகழ்மிக்க ஒரு குறளில்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
என்று இயம்பியுள்ளதைக் கேட்டிருக்கலாம். உள்ளாது என்றால் எண்ணாது (நினைக்காது, கருதாது) என்று பொருள்படும். "புழக்கதிலுள்ளாது" என்று கூகுளில் தேடிப்பார்த்து கிடைக்காததால் "உள்ளாது: என்று தேடிப்பார்த்திருப்பிர்களாக இருக்கும். உள்ளுதல் என்னும் சொல்லின் உள்ளார்ந்த உள்பொருளையும் தக்காரிடம் கேட்டுப் பாருங்கள். பின்னர் உள்ளுதல் என்றால் என்ன, உள்குதல் என்றால் என்ன, உள்->உண்மை என்றால் என்ன என்றும் கேட்டுப் பாருங்கள். --செல்வா 21:22, 10 ஜூலை 2009 (UTC)
- நீங்கள் சொல்லும் பொருள் `உள்ளம்` என்ற வேறிலிருந்து வந்திருக்கலாம். அப்படியிருக்க, `உள்ள` என்பதன் எதிர்மறையாக ‘உள்ளாத` என்று வழக்கமும் உள்ளது. எ.கா.
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3380
"வேறொரு எந்த கலாச்சாரத்தில் உள்ளாத சுபாவம் நம்மிடம் மட்டும் உள்ளது "
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20509021&format=html "நகரக் கோவிலில் உள்ளாத அமைதியும்...."
“ `ஒட்டிட்ட பண்பு` உள்ளாத மனம் அது ...”
சில எதிர்மறைகள்
உள- உளா (பல நன்மைகள் உள - நன்மைகள் உளா)
உள்ளது - உள்ளாதது
உள்ள - உள்ளா (இங்குள்ளா வசதிகள் எங்கு கிடக்கும்)
--Ginger 13:03, 11 ஜூலை 2009 (UTC)
- உள்ளாத மனம் அது உள்ளிய உள்ளம் இது. என்னும் குறிப்புரையில் உள்ளிய-உள்ளாத "எண்ணிய-எண்ணாத, கருதிய-கருதாத" என்னும் பொருளில் வருவது. எதிர்மறை
வழக்கம் உள்ளுதல் (எண்ணுதல், கருதுதல்) என்னும் பொருளுக்குவருவது. உள்ளு-உள்ளா எதிர்மறைகள். உள-உளா, உள்ளது-உள்ளாதது, உள்ள-உள்ளா என்பன உங்கள் தவறான கற்பனைகள். உள்ளு (நினை, எண்ணு) என்னும் வினை, எதிர்மறைப் பொருளில் உள்ளாத (நினைக்காத, எண்ணாத) என்று வரும். உள்ள என்பதற்கு எதிர்மறை இல்லாத. சரி (correct) என்பதற்கு எதிர்மறை சரியாத அல்ல. சரி என்பது வினையாக வரும் (slide) பொழுது, சரியாத (not-sliding) என்று பொருள் தரும். நல்ல என்பதற்கு எதிர்மறை நல்லாத அல்ல. நீங்கள் சரிவர புரிந்துகொள்ளாமல் பேசுகின்றீர்கள். --செல்வா 05:36, 12 ஜூலை 2009 (UTC)
Do Not Feed This Person
தொகுI did not know one of Tamil Wiki's business is feeding somebody.When it become so philonthropic? --Ginger 15:32, 10 ஜூலை 2009 (UTC)
- பார்க்க: en:WP:DFTT --செல்வா 16:51, 10 ஜூலை 2009 (UTC)
===========================
தொகுசில பதில்கள்
தமிழ் விக்கியில் உள்ள குறைகள்?
தமிழ்விக்கி, படிப்பவர்களுக்காகவோ, எழுதுபவர்கள் நலனுக்காகவோ நடத்தப் படுவதல்ல. சிலரின் மொழி சாய்வுகளை மற்றவர்கள் மீது திணிப்பதற்கே பயன்படுகிரது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு விக்கி எந்த வகையில் துணைநிற்கும்?
தற்போதைய நிலையில் தமிழ் வளர்ச்சிக்கு நிச்சயமாக பயன்படாது, சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை. மேலும் , புழக்கத்திலுள்ளாத சொற்களையும், எழுத்துகளையும் பயன்படுத்தி, படிக்கின்றவர் மனதில் குழப்பத்தைதான் உண்டுபண்ணும்.
தமிழ் விக்கி வளர என்ன என்ன வழிகள்?
தமிழ்விக்கி நிர்வாகத்தினர் தங்கள் வழிகளில் கெட்டியாக இருப்பதால், அவர்களுக்கு சீட்டு கிழித்து அனுப்பி, வேரொரு பரந்தமனப்பான்மையுள்ள, pragmatic and practical minded நிர்வாகத்தினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். --Ginger 13:12, 10 ஜூலை 2009 (UTC)
===================================
தொகுமிகச்சரியாக சொன்னீர்கள் சுந்தர்
தொகுமிகச்சரியாக சொன்னீர்கள் சுந்தர். குறிப்பாக தெரன்சு, நீங்கள் செய்யும் உதவிகளின் அருமையையும் இன்றியமியாத தன்மையைப் பற்றியும் என்னைப் போன்ற பல பயனர்கள் மிக நன்றாக அறிவர். கணேசு அவர்கள் உருவாக்கிய தானியங்கி பற்றியும், வினோத், செல்வம் தமிழ் முதலானோர் ஆற்றிய பணிகளையும் குறிப்பிடல் வேண்டும்.--செல்வா 04:30, 11 ஜூலை 2009 (UTC)