விக்கிப்பீடியா பேச்சு:தரமறிதல் முறைமை

குறைவான பங்களிப்பாளர்களே இருக்கும் நிலையில், தற்போது தரமறியும் ஆய்வுகள் தேவையா என்று தோன்றுகிறது. பிற விக்கிபீடியாக்களுடன் ஒப்பிடாமலேயே, தமிழ் விக்கி கட்டுரைகள் பலவும் பெரிதும் தரமுயர்த்தப்படக்கூடியவையே என்பது நாம் அறிந்ததே. தரம் அளந்தாலும் அளக்காவிட்டாலும், எப்படியும் தரத்தை உயர்த்துவது நோக்கி செயல்படுவதே நம் நோக்கம் என்கையில் முழு உழைப்பையும் தரம் உயர்த்தும் வகையிலேயே செலவிடலாமே? தற்போதைய நிலையில் பெரும்பான்மை கட்டுரைகள் தரம் குன்றிய நிலையில் இருக்கையில் அவற்றுக்காக தரக்குறி தருவது, பிறகு தரத்தை உயர்த்துவது, பிறகு திரும்பத் திரும்பத் தரக்குறியை உயர்த்துவது, மாற்றுவது, தரக்குறிகள் தருவதற்காக தேவையில்லாமல் பல பேச்சுப் பக்கங்கள் உருவாக்குவது, அவற்றை ஒருங்கிணைப்பது என்று இவையெல்லாம் அதிக உழைப்பை வேண்டி நிற்பது. ஒரு இலட்சம் கட்டுரை எண்ணிக்கை அல்லது ஆண்டு 2010 அல்லது குறைந்தது 100 முனைப்புடைய பங்களிப்பாளர்கள் என்றவற்றில் ஏதேனும் ஒன்றை அடையும் போது தர ஆய்வு வேலைகளை செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து.--Ravishankar 13:20, 11 அக்டோபர் 2007 (UTC)Reply

100 கட்டுரைகளே இருப்பினும், அவற்றின் தரநிலைகளை நம்மால் இயன்றளவு அளவிடுது பல நன்மைகள் தரும். (1) நல்ல கட்டுரைகள் யாவை. அவை முன்மாதிரியாக அமையலாம்., (2) தரத்தில் அடுத்த படியை அடைய என்னென்ன செய்யவேண்டும் என்னும் கருத்துக்கள் எழலாம்.; பலரும் (சிலரேனும்) படிப்பது பெரும் நன்மை தரும், (3) துறைதோறும் "தேறும்" கட்டுரைகள் (நல்ல தரமுடையவை) எத்தனை (வேதியியலில் எத்தனை, இயற்பியலில் எத்தனை...). ஒவ்வொரு துறையிலும் எவையெவை முக்கியமாக எழுதவேண்டியவை, அதாவது தேவையின் முதன்மை, அடுத்ததாக சிறப்பாக அமையவேண்டிய கட்டுரைகள் யாவை (இது சிறு கட்டுரையாகவும் இருக்கலாம், ஆனால் பல இடங்களில் பயன்படக்கூடியதாக இருக்கலாம்), தேவையின் வலு; (4) திறனாய்வு இல்லையெனில் முன்னேறுவது கடினம். த.வி.யில் 12 கட்டுரைகளே 32 கிலோ 'பைட் அளவைத் தாண்டியுள்ளன. அவை யாவை, அவற்றை முதலில் சீர் செய்து (அதில் சிவப்பு இணைப்பு உள்ளவற்றுக்குக் கட்டுரைகள் எழுதி, உரை திருத்தம் செய்து..), பின்னர் அடுத்ததாக உள்ள 16 கிலோ 'பைட்டைத் தாண்டும் 46 கட்டுரைகளை சீர் செய்யலாம். சில நீளமான கட்டுரைகள் நல்ல கட்டுரைகளாக இல்லாமலும் இருக்கலாம். இவற்றுள் எவை ஒரு துறை சார்ந்து, அறிவுத்துறையின் ஒரு சிறு பகுதியையாவது விளக்குகின்றது என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். கடைசியாக, இவை நேரத்தை வீண் செய்வதல்ல, நேரத்தை "செய்வன திருந்தச்செய்" என்னும்படி செப்பம் தீட்ட செலவிட்டதாகும். விக்கியின் தர அளவீட்டிலும் "ஆழம்" "depth" என்னும் அளவீட்டுக்கும் ஊட்டம் தரும். மிக மிகச் சிறுபான்மையான கட்டுரைகளைத்தான் 2-3 பேருக்கு மேல் திருத்தம், மாற்றம் செய்துள்ளனர். இதுவும் நல்ல போக்கு இல்லை. திருத்த ஆயிரக்கணக்கில் எழுத்துப் பிழைகளும், சொற்றொடர் பிழைகளும் உள்ளன. விடுபட்ட அடைப்புக் குறியை கூட ஓரிருவரைத்தவிர (கோபி, சிவகுமர், கனகு..) திருத்துவதில்லை. தர முத்திரைகள் இடுவதும், அவற்றின் எண்ணிக்கைகளை கண்காணிப்பதும் நல்லது என்பது என் நினைப்பு. ரவி, 467 கட்டுரைகள்தாம் 4 கிலோ 'பைட்டைத் தாண்டியுள்ளன (இது வெறும் 'பைட் அளவுதான்). தர அளவீடுகளும் தேவை. 12,000 கட்டுரைகள் இருக்கும் பொழுது குறைந்தது ஒரு 3,000 கட்டுரைகளாவது 4 கிலோ 'பைட்டைத் தாண்டி, ஓரளவிற்கு நல்ல கட்டுரைகளாக இருந்திருக்க வேண்டும் என்பது என் நினைப்பு (மலையாள விக்கி நன்றாக வலர்ந்து வருகின்றது). 12,000 கட்டுரைகள் இருக்கும் பொழுதே நம்மால் இப்படி செய்ய முடியவில்லை என்றால் 100,000 கட்டுரைகள் வந்தபின் செய்வது இன்னும் கடினம். இப்பொழுது இப்படிச் செய்து சிறு பயிற்சியாவது பெறுவோமே. எல்லாம் என் தனிப்பட்ட கருத்துக்கள்தாம். பகிர்ந்து கொள்வதே நோக்கம். யாரும் வற்புறுத்துவதாக நினைக்க வேண்டாம். --செல்வா 15:56, 11 அக்டோபர் 2007 (UTC)--செல்வா 15:57, 11 அக்டோபர் 2007 (UTC)Reply
மேலே செல்வாவின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். இப்போதைக்கு கல்லூரிகளில் பயன்படக் கூடிய கட்டுரைக்கள் எடுத்துக்காட்டாக இயற்பியல், வேதியியல் போன்றவற்றைத் தர ஆய்வுசெய்வது நல்லது. ஆயினும் அநேகமான கட்டுரைகளில் விடயங்கள் சேர்க்கப்படவேண்டும். இத்திடத்தை ஆரம்பிக்க முன்னர் ஏலவே இருப்பதை விட மேம்படுத்துமுகமாக ஒவ்வொருகிழமையும் இயற்பியல், வேதியியல் போன்ற கட்டுரைகளை கூட்டுமுயற்சிகள் மூலம் மேம்படுத்துவது கூடுதல் பலன் தரக்கூடும். முயன்றுதான் பார்க்கலாமே?. சில மாதங்கள் முன்னர் மலையாளம் விக்கியில் அடோப் அல்லது அடோபி சாப்ட்வேர் தொடர்பான கட்டுரை மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதை (என்னால் மலையாளத்தை வாசிக்க இயலாது) அவதானித்தேன் தவிரவும் கட்டுரை பெரிய அளவில் இருந்ததையும் அவதானித்தேன். --Umapathy (உமாபதி) 16:44, 11 அக்டோபர் 2007 (UTC)Reply

செல்வா, நீங்கள் வற்புறுத்துவதாக நினைக்கவில்லை. உங்களைப் போன்று, பல விதங்களிலும் தமிழ் விக்கியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படும் பலர் தமிழ்விக்கிக்கு வாய்த்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியே. தற்போதக்கு இருக்கிற சில பங்களிப்பாளர்களின் முழு உழைப்பும் நேரடியாக கட்டுரையாக்கத்துக்கு செல்லட்டுமே என்று தான் நினைக்கிறேன். கட்டுரை ஆக்கத்தில் அதிகம் ஈடுபடாத, ஆனால் இது போன்ற திட்ட ஒருங்கிணைப்பில் ஈடுபாடுள்ள தன்னார்வலர்கள் வருங்காலத்தில் வரும்போது இது போன்ற பணிகளைச் செய்ய முடியும். உங்களைப் போன்றவர்கள் இந்தப் பெரும்பணியில் ஈடுபடுவதால் கட்டுரை ஆக்கங்களில் தொய்வு ஏற்படும் என்று கவலை எழுகிறது. குறைந்தபட்ச பயிற்சியாவது முடிந்த பிறகு தானே தேர்வு எழுதுகிறோம்? அந்த வகையில் த.வி-யின் முன்னேற்றத்தை அளந்து பார்க்கும் அளவு நாம் தயாராகவில்லை என்று நினைக்கிறனே. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு விதத்தில் செப்பனிடப்பட வேண்டி இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே? எனவே ஆய்வு ஏதும் இல்லாமல், இருக்கிற ஒவ்வொரு கட்டுரையையும் மேம்படுத்துவோம் என்று செயல்படலாகாதா? இந்தத் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று கோருகிறேன். எனினும், பிற பயனர்கள் தற்போது இதைச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணும் பட்சத்தில் நானும் இயன்ற அளவு உதவுகிறேன்.--Ravishankar 19:22, 11 அக்டோபர் 2007 (UTC)Reply


ரவி, செல்வா சொல்வது பெரும்பாலும் சரியென்றே நினைக்கின்றேன். ஆனால் இறுக்கம் கூடாது. அப்படி ஒரு தோற்றப்பாடும் எழுப்பப்படக்கூடாது. விரிந்த பங்களிப்பையே நாம் என்றும் முன்னிறுத்த வேண்டும். --Natkeeran 00:01, 12 அக்டோபர் 2007 (UTC)Reply

தரமறிவதை நான் ஒரு சுயவிமர்சனமாகத் தான் காண்கிறேன். கட்டுரை எண்ணிக்கை, தரம் என்பனவற்றைக் கூட்டுவதில் எல்லா வளங்களையும் பயன்படுத்துவோமே என்ற ரவியின் கருத்துக்கள் சரியாகப் பட்டாலும், தரமறிதல் முறையை நாம் பின்பற்றினால், எமது வளங்களை தேவையான கட்டுரைகளுக்கு செலுத்த வாய்ப்பு ஏற்படும். உதரணமாக முக்கியத்தில் கூடிய கட்டுரை ஒன்று தரத்தில் குறை நிலையில் காணப்பட்டால் அங்கே பங்களிப்பைக் கூட்டலாம். உண்மையைக் கூறுவதென்றால் இதை நாம் இப்போதும் செய்தே வருகின்றோம் (மனதுக்குள்) இதை வரையறுத்து சீர்தரமாக புதுப்பயனருக்கு வசதியாக செய்வதே இத்திட்டத்தின் விளைவாக இருக்கும். மேலும் இக்கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு நாம் கட்டுரையின் தரம் பற்றிய ஒரு அளவீட்டைக் கொடுப்பது வாசிப்பவர்களுக்கும் உதவும்.--டெரன்ஸ் \பேச்சு 03:15, 12 அக்டோபர் 2007 (UTC)Reply

மிகவும் குறைந்த அளவிலேயே பயனர்களைக் கொண்டுள்ள தமிழ் விக்கிபீடியாவில் எத்தகைய வேலைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பில் ரவியின் கருத்துக்கள் நியாயமானவைதான். ஆனாலும், ஏதாவது ஒரு வகையிலான தரக் கணிப்பீடு தற்போது அவசியமானது என்பதே எனது கருத்தும். தற்போதைய நிலையில் கட்டுரைகளின் நீளம் மட்டுமே ஒப்பீட்டுக்குப் பயன்படக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இங்கே பலரும் எடுத்துக் காட்டியிருப்பதுபோல நீளம் அல்லது பைட் அளவு கட்டுரையின் தரத்தை அறியப் போதுமானது அல்ல. எனவே ஒரு தரக் கணிப்புமுறை இருந்தால்தான் கட்டுரைகளை விரிவாக்குபவர்களும், நல்ல புதிய கட்டுரைகளை எழுத முயல்பவர்களும் தங்கள் நேரத்தைக் கூடிய பயன் தரத்தக்க வகையில் செலவிட முடியும். கட்டுரை ஒன்றின் தரத்துக்கும் நீளத்துக்கும் உள்ள தொடர்பு எடுத்துக்கொண்ட தலைப்பிலும் பெருமளவுக்குத் தங்கியுள்ளது. சில தலைப்புக்களில் 4 கி.பைட் அளவுக்குள்ளேயே முழுமையான கட்டுரைகளைக் கொடுக்கமுடியும், தரமானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால், வேறு சில தலைப்புக்கள் அப்படியல்ல. இதனால், கட்டுரையின் முழுமை என்பதும் தரக் கணிப்பீட்டில் முக்கியமான ஒரு அம்சமாகும். எடுத்துக்காடாகக் கடல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதும்போது அதன் எல்லா அம்சங்கள் பற்றியும் மேலோட்டமாகவேனும் தகவல்கள் இருப்பது நல்லது. அதைவிடுத்து அதில் உருவாகும் அலைகளைப் பற்றி மட்டும் மிக விரிவாக 16 கி. பைட்டுகள் நீளத்துக்கு எழுதினால் அது கடல் பற்றிய தரமான கட்டுரை ஆகாது. நமது தமிழ் விக்கியில் உள்ள பல நீளமான கட்டுரைகள் இவ்வாறான ஒரு நிலையில் இருப்பதையும் நாம் அவதானிக்கலாம். இவற்றுள் நான் எழுதிய பல கட்டுரைகளும் அடக்கம். சிறிய கட்டுரைகள் ஆனாலும் முழுமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. Mayooranathan 06:56, 12 அக்டோபர் 2007 (UTC)Reply
Return to the project page "தரமறிதல் முறைமை".