விக்கிப்பீடியா பேச்சு:மீடியாவிக்கி தமிழாக்கத் திட்டம்

செல், தடு போன்ற கட்டளைகள் அஃறிணைப் பொருளான கணினிக்குத்தான் கொடுக்கப்படுகிறது இதனால், செல்க, தடுக்கவும் போன்ற மரியாதைச் சொற்கள் அவசியமில்லை என்று நினைக்கிறேன். பயனரை விழிக்கும்போது மட்டும் மரியாதைச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே தமிழ்ச் சொற்கள் கூடிய இடம் எடுப்பவையாக இருப்பதால் பக்கங்களை அழகான தோற்றத்துடன் பேணுதல் கடினமாக உள்ளது. மயூரநாதன் 18:17, 3 மார்ச் 2008 (UTC)

நானும் அதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறேன். கண்ணிக்கு கொடுக்கப்படும் கட்டளைகள் செல், தடு போன்று இருப்பது தகும்.

பயனரை விழிக்கும்போது எம்முறைத் தகும்?

  1. நீர்/உமது/செயல்படுத்தவும்
  2. நீங்கள்/உங்களது/செயல்படுத்துங்கள்

--Terrance \பேச்சு 03:03, 4 மார்ச் 2008 (UTC)

நீர், உமது பழங்கால நடையாக இருக்கும். செயல்படுத்தவும், செயல்படுத்துங்கள் - இரண்டுமே சரி தான். --ரவி 08:51, 4 மார்ச் 2008 (UTC)

செயல்படுத்துங்கள் என்பது செய்க என்பதுதான். செய்க என்றே சொல்லாம்.--செல்வா 12:27, 4 மார்ச் 2008 (UTC) மேலும் விளித்தல் என்று கூறவேண்டும். விழித்தல் என்றால் தூங்கி எழுவது, தெரியாமல் முழிப்பது, பரக்க பரக்க வெறித்துப் பார்ப்பது. எனவே விழி (விழித்தல்) வேறு விளி (விளித்தல்) வேறு.--செல்வா 12:30, 4 மார்ச் 2008 (UTC)

ஏவல் நடை

தொகு

செல், தேடு போன்றவை கணினிக்கு கொடுப்பதாக நான் குறிப்பாக கருதவில்லை. இந்த கட்டளைகள் மனிதர்களை நோக்குவதாக நான் உணர்கிறேன். உதாரண்மாக, தேடு என பொத்தான் இருப்பதை வைத்துக்கொள்வோம். தேடுவதற்கு இந்த பொத்தானை சொடுக்கிட வேண்டும் என கணினி எனக்கு உணர்த்துவதாகத்தான் நான் உணர்கிறேன். நான் கணினிக்கு கட்டளையிடுவதாக இது வரை உணர்ந்ததில்லை. எனவே ஒவ்வொரு செயலையும் கணினி நமக்கு உணர்த்துவதாக கருதுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கலாம்.

பி.கு: ஒரு முறை என் அம்மா, எனது கணினியில் தமிழ் விண்டோஸ் பதிப்பை பயன்படுத்திய பிறகு, உன்னோட கம்ப்யூட்டருக்கு மரியாதையே தெரியல. ஒழுங்கா அத மரியாதையா பேசச்சொல்லு என கூறிவிட்டுப்போனார் వినోద్  வினோத் 12:47, 4 மார்ச் 2008 (UTC)

//ஒரு முறை என் அம்மா, எனது கணினியில் தமிழ் விண்டோஸ் பதிப்பை பயன்படுத்திய பிறகு, உன்னோட கம்ப்யூட்டருக்கு மரியாதையே தெரியல. ஒழுங்கா அத மரியாதையா பேசச்சொல்லு என கூறிவிட்டுப்போனார்//

நச் :) --ரவி 20:41, 4 மார்ச் 2008 (UTC)

வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்தின் போது பகிர்ந்த குறிப்புகள் உதவலாம்--ரவி 20:43, 4 மார்ச் 2008 (UTC)

ரவி, நான் வாக்கு அளிக்கவில்லை, ஆனால் எனக்கு இரண்டுமே ஏற்புதான். கீழ்க்கண்ட என் கருத்தை பின்னூட்டமாக இட்டுள்ளேன். உன்மையில் என் முன்னுரிமை "வெட்டு, ஒட்டு, தொகு என்பதற்குத்தான்." நான் இட்ட பின்னூட்டம்:

TBCD சொல்வதுபோல, வெட்ட ஒட்ட, தேட, தொகுக்க என்பது போல் இருத்தல் தவறில்லை. நிறைவில்லாமல் இருப்பது உண்மை (வினையெச்சமாக), ஆனால் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். "வெட்ட என்னும் சுட்டியை சொடுக்குங்கள்" என்று கூறுதல் இயலும்.

இது இயலாது எனில், வெட்டு, ஒட்டு என்றே கூறலாம். ஆனால் வெட்டுக, ஒட்டுக என்னும் வழக்குக்கு எதிர்ப்பாளியல்ல (சற்று மிகையாகவே தோன்றுகின்றது). வெட்டு, ஒட்டு என்பது ஆணை என்பதைவிட என்ன வினை என்பதனைக் குறிக்கும். தமிழில் வினைச்சொற்கள், வினையடிச் சொற்கள், ஏவல் வினைதான். அதாவது பால், காலம் முதலான பின்னொட்டுகள் சேரா வினைச்சொற்கள் Infinitive forms என்பார்களே அது. ஆகவே ஏவல் வினை (ஆங்கிலத்தில் imperative form - which is actually and simultaneously the infinitive form in Tamil. அதாவது to cut என்பது ஆங்கிலத்தில் infinitive form ஆனால் தமிழில் வெட்டு என்பது infinitive form.) - --செல்வா 18:14, 18 மார்ச் 2008 (UTC) "அதாவது வெட்டு என்பது வெட்டு என்னும் வினையைக் குறிக்கும். "வெட்ட" (வெட்டுவதற்கு) அந்தப் பொத்தானை, சுட்டியை, மீசுட்டு இணைப்பைச் சொடுக்க வேண்டுமமென்று உணரத்துவது, அவ்வளவுதான்."--செல்வா 18:21, 18 மார்ச் 2008 (UTC)

தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை --ரவி 17:32, 18 மார்ச் 2008 (UTC)

ஓட்டளித்து விட்டேன். இதில் கள்ள வோட்டு போடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதாவது உள்ளதா ? :-))) వినోద్  வினோத் 17:39, 18 மார்ச் 2008 (UTC)

விளக்கத்துக்கு நன்றி செல்வா. வினோத், இது போன்ற விசயங்களில் வாக்கெடுப்பு கருத்து அறியும் முகமாகத் தான். நாம் மகிச் சிறிய எண்ணிக்கையினரிடம் தானே வாக்கெடுப்பு நடத்துகிறோம்? அதற்குப் பிறகும் உரையாடி தான் மொழிபெயர்ப்புத் தொனி குறித்து முடிவு செய்ய வேண்டும். --ரவி 20:40, 18 மார்ச் 2008 (UTC)

தமிழாக்கம் எங்கே நடைபெறுகிறது?

தொகு

டெரன்ஸ் - தமிழாக்கம் எங்கே நடைபெறுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை :( எந்தப் பக்கத்தில் நேரடியாகப் பங்களிக்கலாம், மேலதிக உதவிக் குறிப்புகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். நிறைய தமிழ்த் திட்டங்களில் காலை வைத்திருப்பதால் நேரடியாக அதிகம் பங்களிக்க இயலாததற்கு வருந்துகிறேன். எனினும் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்புறம், தமிழாக்க உதவி கேட்கும் போது சரங்கள் இடம் பெறும் சூழலையும் விளக்கினால் உதவும். --ரவி 20:48, 4 மார்ச் 2008 (UTC)

தமிழாக்கம்

தொகு

domain என்பதற்கு ஆட்களம் என்று தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சொற்பிறப்பு என்ன? ஆள் + களம் = ஆட்களம் என்பதா? இங்கே ஆள் என்பது ஆட்சி என்பதைக் குறிக்குமாயின், சொல் ஆள்களம் (ஆளுகைக்கு உட்பட்ட களம்) என்று இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். இங்கே விக்கிப்பீடியாவில் இதற்கு உரிமைப்பரப்பு என்ற சொல்லும் ஆளப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். ஆள்களம் நல்ல சொல்லே.மயூரநாதன் 03:12, 5 மார்ச் 2008 (UTC)

ஆம், ஆளுகைக்கு உட்பட்ட களம் என்ற பொருளில் ஆள்+களம் = ஆட்களம் என்று கருதினேன். பல தளங்களிலும் இச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளேன். ஆனால், முதலில் வேறு சில இடங்களிலும் இச்சொலைக் கண்டிருக்கிறேன். இங்கு website domainக்கு ஈடாகவே இந்தச் சொல்லைப் பரிந்துரைத்தேன். உரிமைப்பரப்பு என்பது நாடுகளின் ஆட்சிப்பகுதிகளுக்குப் பொருந்தி வரும்--ரவி 06:57, 5 மார்ச் 2008 (UTC)

ஆட்களம் என்னும் போது ஆள் (நபர்) தொடர்பான களம் என்ற பொருள் வரும். எனவே ஆள்களம் என்று பயன்படுத்துவதே நல்லது என்பது எனது கருத்து. மயூரநாதன் 17:11, 5 மார்ச் 2008 (UTC)

செயற்களம் ? వినోద్  வினோத் 18:11, 5 மார்ச் 2008 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மீடியாவிக்கி தமிழாக்கங்களை இறக்கிக் கொள்ளலாம்

தொகு

http://translatewiki.net/wiki/Import_requests --ரவி 00:11, 17 மார்ச் 2008 (UTC)

தமிழ் விக்கியில் உள்ள தமிழாக்கங்கள் யாவுமே பீட்டாவிக்கிக்கு உரிய மாற்றங்களுடன் (தானியக்கமாக அல்லாமல்) ஏற்றப்பட்டு விட்டன.--Terrance \பேச்சு 02:45, 17 மார்ச் 2008 (UTC)
Return to the project page "மீடியாவிக்கி தமிழாக்கத் திட்டம்".