விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் பொறியியல்
விக்கித் திட்டம் பொறியியல் ஆரம்பித்தல் - கலந்துரையாடல்
தொகுபயனர்:Jaekay
தொகுவேலை நிமித்தமாக சீனா வரவேண்டியிருந்ததால் சில நாட்களாக தமிழ் விக்கி பக்கம் வரவியலவில்லை. நான் வெகு நாட்களாக தமிழ் விக்கியில் "பொறியியல் portal" ஒன்றை உருவாக்கி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கட்டுரைகளை தொக்குக்க நினைத்திருந்தேன். இம்முறை சென்னை திரும்பியத்தும் அவ்வேலையை தொடங்க உத்தேசித்துள்ளேன். இதற்கென ஒரு விக்கி திட்டத்தை அறிவித்து இது தொடர்பான வேலைகளை ஒருங்கிணைக்கலாமா? இல்லை ஏற்கனவே இது தொடர்பான திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?இது பற்றி மேலதிகமான யோசனை இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள் - Jaekay
- உங்கள் திட்டத்தை வரவேற்கிறேன். இங்கு பங்குபற்றுவோர் பலர் நுட்பவியலாளர்கள் அல்லது பொறியிலாளர்களே. அடிப்படை கருத்துருக்கள் இருந்தாலே (எடுத்துக்காட்டாக atom, mass, current) பொறியில் தலைப்புகளில் எழுதாலாம் என்பது தற்போதைய அணுகுமுறையாக இருக்கின்றது. இது நல்ல அடுத்த கட்டமாக இருக்கும். முதலில் ஓரு பொறியில் தலைப்புகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். பின்னர் ஒரு விக்கி திட்டத்தை தொடங்கலாம். அடிப்படை கருத்துருக்கள், பொறியில் துறை, கல்வி, தற்கால பொறியில் பாடங்கள் (ex: system engineering) ஆகியவற்றும் முன்னுரிமை தரலாம். http://ocw.mit.edu/OcwWeb/web/home/home/index.htm இதற்கு பயனாக இருக்கும். Computer, Electrical, Electronics, Chemical, Biotech ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள் தற்போது விக்கி சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால், civil, aerospace, mechanical, deep ocean, system பொறியில துறைகளைச் சார்ந்தோர் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்தவும் முயலவேண்டும். முதற்கட்டமாக 10 துறைகளை எடுத்து, அவற்றுல் ஒவ்வொன்றுக்கும் 50 தலைப்புகளை முதன்மைப்படுத்தலாம். இதில் Computer, Electrical, Electronics இருக்கும் தகவல்களை சரிபார்த்து, விரிவாக்கி, ஒழுங்கமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். circuits பற்றிய விரிவான தகவல்களயும் தரலாம். --Natkeeran 19:04, 4 ஏப்ரல் 2008 (UTC)
Jaekay, பொறியாளர்களாகிய நாம் இதனைக் கட்டாயம் செய்ய வேண்டும். இருப்பவர்கள் மிகமிகக் குறைவாக இருப்பதால், ஏற்கனவே உள்ள திட்டங்கள் நிறைவேறாமல் இருக்கின்றன. ஆனாலும், நீங்கள் தொடங்குங்கள், சற்று சூடு பிடிக்கும் முன், மற்ற திட்டங்கள் ஓரளவிற்கு முன்னேறிவிடும், அதுவரை இடையிடையே வந்து உதவுகிறேன். என் பரிந்துரை என்னவென்றால், முதலில் அடிப்படை அலகுகள் (ஆம்ப்பியர், வாட் முதலான 50க்கும் மேற்பட்டவை) தெளிவாக, யாருக்கும் விளங்குமாறு எழுதுதல் வேண்டும். இப் பணியை மற்ற பொறியியல் கட்டுரைகள் எழுதும் பொழுது, தேவைக்கு ஏற்றார்போல அவ்வப்பொழுதும் செய்து கொள்ளலாம். வேண்டிய அறிவும் ஆர்வமும், ஊக்கமும் இருந்தாலும், நேரமும், உழைப்பும் போதவில்லை, ஒழுங்குபடு முடியவில்லை! உங்கள் திட்டத்திற்கு என் ஆதரவு உண்டு. --செல்வா 19:23, 4 ஏப்ரல் 2008 (UTC)
குறிப்புகள்
தொகுகலைச்சொற்கள்
தொகு- ஒழுங்கமைப்பு - system
- கட்டமைப்பு - structure
- செயல்முறையாக்கம், முறைவழியாக்கம் - process
- ஒழுங்கமைப்பியல் - system studies
- செயல், வினை - function
- அமைப்பு - organization
மேலே ஒழுங்கமைப்பு என்பது system என்ற ஆங்கில சொல்லுக்கு இணையாக எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியாது. எடுத்துக்காட்டாக Control System என்பதை கட்டுப்பாடு ஒழுங்கமைப்பு என்பதை விட கட்டுப்பாடு கட்டமைப்பு என்பது பொருந்துகிறது. கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.
Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான்.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
துல்லியமாக திட்ட இலக்குகளை வரையறுத்தல்
தொகுமுதற்கட்ட இலக்கை ஒரு அளக்ககூடியவாறு துல்லியமாக்கினால் நன்று. எ.கா 10 துறைகளில் 50 நல்ல கட்டுரைகள் என்று வைக்கலாமா? --Natkeeran 17:28, 8 ஏப்ரல் 2008 (UTC)
- 10*50 = 500 நல்ல கட்டுரைகள் என்பது பெரிய இலக்காகத் தோன்றுகிறது. இல்லை வெறும் 50 கட்டுரைகள் எனக்கூறுகிறீர்களா. எல்லாதுறைகளிலும் சேர்த்து 50 அடையக்கூடிய இலக்காகத் தோன்றுகிறது. --Jaekay 17:40, 8 ஏப்ரல் 2008 (UTC)
- 50 என்றே வைத்து கொள்ளலாம். அலகுகள், துறைகள், அடிப்படைக் கருத்துருக்களுக்கு முக்கியம் தரலாம். முதற்கட்ட இலக்குகள் கட்டுரைகளை பட்டியலிடலாம். தற்போது இருக்கும் வளங்களை கருத்து கொள்கையில் குறைந்தது 4 மாதங்கள் வரை தேவைப்படலாம். நன்றி. --Natkeeran 17:48, 8 ஏப்ரல் 2008 (UTC)
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி
தொகு- en:Indian Institute of Technology Madras
- அண்ணா பல்கலைக்கழகம்
- en:National Institute of Technology Tiruchirappalli
- en:Vellore Institute of Technology
- en:PSG College of Technology
http://vizhiyan.wordpress.com/2007/05/28/best-colleges/
--Natkeeran 00:19, 9 ஏப்ரல் 2008 (UTC)
அரசு நிறுவனங்கள்
தொகு- தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் - இலங்கை - http://202.69.201.131/~nerdclk/TA/services.php
- பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
கலைச்சொற்களில் முரண்பாடுகள்
தொகுபொறியியல் திட்டத்திற்கு புத்துணர்வு
தொகுஇத்திட்டத்திற்கு மறுபடியும் புத்துணர்வு ஊட்ட எண்ணுகிறேன். விரும்போர்கள் சேருங்கள். அடுத்து என்ன என்ன கட்டுரைகள் உருவாக்க வேண்டும் என்று பட்டியலிட்டு தொடங்கலாம். நன்றி. --இராஜ்குமார் 10:26, 18 செப்டெம்பர் 2011 (UTC)